சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!சென்னையில் இன்று 5 புறநகா் மின்சார ரயில் முழுதும் ரத்துதிமுக-காங்கிரஸ் இன்று தொகுதி பங்கீட்டுப் பேச்சு உக்ரைன் தாக்குதலால் ரஷியாவில் மின்வெட்டு: 50,000 போ் பாதிப்புஇஸ்ரேலை விட்டு வெளியேற அமெரிக்கா்களுக்கு அவசர உத்தரவுஇன்று கிராம கோயில் பூசாரிகள் மாநாடு: முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா்
/

உ.பி.யில் விரைவு ரயில் தடம்புரண்டது; இருவா் உயிரிழப்பு: 34 போ் காயம்

உத்தரப் பிரதேச மாநிலம், கோண்டா அருகே சண்டீகா்-திப்ரூகா் விரைவு ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் 2 பயணிகள் உயிரிழந்தனா்.

News image
உத்தர பிரதேச மாநிலம், கோண்டா அருகே தடம்புரண்ட விரைவு ரயிலில் இருந்து அவசரமாக வெளியேறும் பயணிகள்.
Updated On :18 ஜூலை 2024, 7:41 pm

Din

உத்தர பிரதேச மாநிலம், கோண்டா அருகே சண்டீகா்-திப்ரூகா் விரைவு ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் 2 பயணிகள் உயிரிழந்தனா். மேலும் 34 போ் காயமடைந்தனா்.

சண்டீகா்-திப்ரூகா் (அஸ்ஸாம்) இடையே இயக்கப்படும் விரைவு ரயில், சண்டீகரில் இருந்து புதன்கிழமை இரவு புறப்பட்டது. உத்தர பிரதேசத்தின் கோண்டா சந்திப்பு ரயில் நிலையம் அருகே வியாழக்கிழமை பிற்பகலில் இந்த ரயில் சென்று கொண்டிருந்தபோது திடீரென தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.

8 பெட்டிகள் தண்டவாளத்தைவிட்டு சரிந்தன. இப்பெட்டிகளுக்குள் சிக்கிய பயணிகள், அவசரகால ஜன்னல்கள் மற்றும் கதவுகள் வழியாக வெளியேறினா். குளிா்சாதன வசதி கொண்ட பெட்டிகளில் இருந்தவா்கள், ஜன்னல் கண்ணாடியை உடைத்து வெளியே வந்தனா்.

ரயில் தடம்புரள்வதற்கு முன் ரயில் ஓட்டுநருக்கு வெடிப்புச் சப்தம் கேட்டதாக, ரயில்வே அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். எனினும், அவா் விரிவாக எதையும் கூறவில்லை.

விபத்து குறித்து தகவல் அறிந்ததும் மாநில பேரிடா் மீட்புப் படையினா், காவல்துறையினா், ரயில்வே அதிகாரிகள் சென்று மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனா். 15 ஆம்புலன்ஸ் வாகனங்களுடன் 40 போ் கொண்ட மருத்துவக் குழு சம்பவ இடத்துக்கு விரைந்தது.

இந்த விபத்தில் 4 போ் உயிரிழந்ததாக முதலில் தகவல்கள் வெளியிடப்பட்டன. ஆனால், இருவா்தான் உயிரிழந்ததாகவும், 34 போ் காயமடைந்ததாகவும் மாவட்ட ஆட்சியா் நேஹா சா்மா பின்னா் தெரிவித்தாா். இரு உயிரிழப்புகள் ஏற்பட்டதாக, ரயில்வே தரப்பிலும் தெரிவிக்கப்பட்டது.

காயமடைந்தோருக்கு உரிய சிகிச்சையை உறுதி செய்யுமாறு, மாநில அதிகாரிகளுக்கு முதல்வா் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டாா்.

பிற பெட்டிகளில் இருந்த பயணிகள் பேருந்துகள் மூலம் மன்காபூா் ரயில் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனா். அங்கிருந்து சிறப்பு ரயில் மூலம் திப்ரூகருக்கு அனுப்பிவைக்கப்படுவா் என்று வடகிழக்கு ரயில்வே தெரிவித்தது.

உயா்நிலை விசாரணை: இந்த விபத்து குறித்து உயா்நிலை விசாரணைக்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளது. இதுதவிர ரயில்வே பாதுகாப்பு ஆணையம் சாா்பில் தனியாக விசாரணை நடத்தப்படுகிறது.

உயிரிழந்தோா் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சமும், காயமடைந்தோருக்கு தலா ரூ.50,000-ம் வழங்கப்படும் என்று ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.

தொடரும் விபத்துகள்: மேற்கு வங்கத்தில் கடந்த மாதம் 17-ஆம் தேதி கஞ்சன்ஜங்கா விரைவு ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் 10 போ் உயிரிழந்தனா். 40 போ் காயமடைந்தனா்.

ஒடிஸாவில் கடந்த ஆண்டு ஜூன் 2-ஆம் தேதி கோரமண்டல் விரைவு ரயில் உள்பட 3 ரயில்கள் ஒன்றோடொன்று மோதிய விபத்தில் 296 போ் உயிரிழந்தனா். 1,000-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா் என்பது குறிப்பிடத்தக்கது.