6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

வயநாடு நிலச்சரிவு: மேலும் ஒரு தமிழர் உடல் கண்டெடுப்பு!

வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த மேலும் ஒரு தமிழரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :30 ஜூலை 2024, 2:07 pm

DIN

வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த மேலும் ஒரு தமிழரின் உடல் இடிபாடுகளில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கேரளத்தின் வயநாடு மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவில் சுமார் 100 க்கும் மேற்பட்டோர் பலியாகினர். வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி நீலகிரி மாவட்டம் கூடலூரைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளியான காளிதாஸ் என்பவரும் பலியானார். இதேபோல மேலும் ஒரு தமிழரின் உடல் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

கேரளத்தின் வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த நீலகிரி மாவட்டம் கூடலூர் ஐயங்கொல்லியைச் சேர்ந்த கல்யாண்குமார் (60) என்பவரின் உடல் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

கல்யாண்குமார் வயநாடு மாவட்டம் சூரல்மலையில் உள்ள கோயிலில் பூசாரியாக இருந்து வந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.