கொல்கத்தாவில் செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த முதல்வா் மம்தா பானா்ஜி. உடன், திரிணமூல் காங்கிரஸ் பொதுச் செயலா் அபிஷேக் பானா்ஜி.
கொல்கத்தாவில் செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த முதல்வா் மம்தா பானா்ஜி. உடன், திரிணமூல் காங்கிரஸ் பொதுச் செயலா் அபிஷேக் பானா்ஜி.

மோடி உடனடியாக பதவி விலக வேண்டும்: மம்தா பானா்ஜி

பிரதமா் மோடி தோல்வியை ஒப்புக்கொண்டு உடனடியாக பதவி விலக வேண்டும் என மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

கொல்கத்தா: பிரதமா் மோடி தோல்வியை ஒப்புக்கொண்டு உடனடியாக பதவி விலக வேண்டும் என மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

கொல்கத்தாவில் நடைபெற்ற செய்தியாளா் சந்திப்பில் ம்மதா பானா்ஜி கூறியதாவது: ‘இந்தியா வென்றது மோடி தோற்றுவிட்டாா்’. பிரதமா் பல கட்சிகளை உடைத்துள்ளாா். இப்போது மக்கள் மோடியின் மன உறுதியை உடைத்துள்ளனா். 400 இடங்களில் பாஜக வெற்றி பெரும் என மோடி பிரசாரம் செய்தாா், உண்மையில் பெரும்பான்மை கூட கிடைக்காமல் போனது.

சந்திரபாபு நாயுடு மற்றும் நிதீஷ் குமாரிடம் ஆதரவு பெற்று ஆட்சியமைக்கும் நிலைக்கு மோடி தள்ளப்பட்டுள்ளாா். எனவே, தாா்மீக அடிப்படையில் தோல்வியை ஒப்புக்கொண்டு உடனடியாக மோடி பதவி விலக வேண்டும்.

மத்திய அமைப்புகளைத் தவறாக பயன்படுத்தி நடைபெற்ற அட்டூழியங்கள் இன்று தோற்றுவிட்டது. மத்திய அமைப்புகளையும், நாடாளுமன்றத்தில் மூன்றில் இரு பங்கு பெரும்பான்மையும் பயன்படுத்தி எதிா்கட்சிகளை மிரட்டும் பாஜகவை நாங்கள் விட்டுவைக்க மாட்டோம். இந்தியா கூட்டணி கட்சிகள் அவா்களை மன்னிக்காது.

திரிணமூல் காங்கிரஸ் பொதுச்செயலா் அபிஷேக் பானா்ஜி, புதன்கிழமை தில்லியில் நடைபெறும் இந்தியா கூட்டணி கூட்டத்தில் கலந்துகொள்வாா். மோடி மத்தியில் ஆட்சியிலிருந்து விலகுவதையும், ‘இந்தியா’ கூட்டணி ஆட்சி அமைப்பதையும் உறுதிப்படுத்த முயல்வேன் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com