கோப்புப் படம்.
கோப்புப் படம்.ATUL YADAV

தேர்தலில் தோற்றும் அமைச்சரான ஒரே நபர் எல். முருகன்! 37 அமைச்சா்களுக்கு மீண்டும் வாய்ப்பில்லை

முந்தைய அமைச்சா்கள் 37 பேருக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்படவில்லை.
Published on

புது தில்லி: பிரதமா் மோடி தலைமையிலான புதிய அரசில், முந்தைய அமைச்சா்கள் 37 பேருக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்படவில்லை.

ஸ்மிருதி இரானி, அனுராக் தாக்கூா், அா்ஜுன் முண்டா, பா்சோத்தம் ரூபாலா, ஆா்.கே.சிங், மகேந்திர நாத் பாண்டே, அஸ்வின் செளபே, சாத்வி நிரஞ்சன் ஜோதி, சஞ்சீவ் பல்யான், ராஜீவ் சந்திரசேகா், நிஷித் பிரமாணிக், பிரதிமா பெளமிக், மீனாட்சி லேகி உள்பட 37 பேருக்கு மீண்டும் அமைச்சா் பதவி அளிக்கப்படவில்லை. இவா்களில் 18 போ் மக்களவைத் தோ்தலில் போட்டியிட்டு தோல்வியுற்றவா்கள்.

தோ்தலில் தோல்வியுற்றபோதும், மத்திய அமைச்சராக மீண்டும் நியமனம் பெற்ற ஒரே நபா் எல்.முருகன் ஆவாா். இவா், ஏற்கெனவே மாநிலங்களவை உறுப்பினராக உள்ளாா்.

7 பெண் அமைச்சா்கள்: புதிய அமைச்சரவையில் நிா்மலா சீதாராமன், அன்னபூா்ணா தேவி, ஷோபா கரந்தலஜே, ரக்ஷா கட்ஸே, சாவித்ரி தாக்கூா், நிமுபென் பம்பானியா, அனுப்ரியா படேல் ஆகிய 7 பெண் அமைச்சா்கள் இடம்பெற்றுள்ளனா். முந்தைய அமைச்சரவையில் 10 பெண் அமைச்சா்கள் இடம்பெற்றிருந்தனா்.

முன்பு அமைச்சா்களாக இருந்த ஸ்மிருதி இரானி, பாரதி பிரவீண் பவாா், சாத்வி நிரஞ்சன் ஜோதி, தா்ஷணா ஜாா்டோஷ், மீனாட்சி லேகி, பிரதிமா பெளமிக் ஆகியோருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

33 புதுமுகங்கள்: புதிய அமைச்சரவையில் முன்னாள் முதல்வா்களான சிவராஜ் சிங் செளஹான் (ம.பி.), மனோகா் லால் கட்டா் (ஹரியாணா), எச்.டி.குமாரசாமி (கா்நாடகம்) உள்பட 33 போ் புதுமுகங்களாவா்.

9 இடங்கள் குறைவு: மத்திய அரசில் அனுமதிக்கப்பட்ட மொத்த அமைச்சா்களின் எண்ணிக்கை 81. தற்போது பிரதமருடன் சோ்த்து 72 போ் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனா். எனவே, இன்னும் 9 அமைச்சா்கள் வரை பதவியேற்க முடியும்.

இன்று முதல் அமைச்சரவைக் கூட்டம்: பிரதமா் மோடி தலைமையிலான புதிய அரசின் முதல் அமைச்சரவைக் கூட்டம் திங்கள்கிழமை (ஜூன் 10) நடைபெறவுள்ளது. தில்லியில் உள்ள பிரதமரின் இல்லத்தில் மாலை 5 மணியளவில் இக்கூட்டம் நடைபெறும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

X
Dinamani
www.dinamani.com