காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

வங்கதேச பிரதமரை சந்தித்த சோனியா, ராகுல், பிரியங்கா!

சோனியா காந்தியும், ராகுல் காந்தியும், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவை இன்று சந்தித்துப் பேசினர்.

News image
வங்கதேச பிரதமருடன் சோனியா காந்தி, ராகுல், பிரியங்கா
Updated On :10 ஜூன் 2024, 10:54 am

DIN

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியும், ராகுல் காந்தியும், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவை இன்று (ஜூன் 10) சந்தித்துப் பேசினர்.

பிரதமர் நரேந்திர மோடி பதவியேபு விழாவில் பங்கேற்பதற்காக ஷேக் ஹசீனா இந்தியாவுக்கு வருகை புரிந்தார். அந்த நிகழ்ச்சி முடிந்து தில்லியில் அவர் தங்கியிருந்தபோது, இந்த சந்திப்பு நடைபெற்றது.

காங்கிரஸ் நாடாளுமன்ற குழு தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மற்றும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர், வங்க தேச பிரதமர் ஷேக் ஹசீனாவை தில்லியில் சந்தித்தனர்.

வங்கதேச பிரதமருடன் சோனியா காந்தி, ராகுல், பிரியங்கா

வங்கதேச பிரதமருடன் சோனியா காந்தி, ராகுல், பிரியங்கா

ஷேக் ஹசீனாவுக்கும் காந்தி குடும்பத்துக்கும் இடையிலான உறவு அவர்களின் முன்னோர்கள் காலத்திலிருந்தே தொடர்ந்து வருகிறது. ஷேக் ஹசீனாவின் தந்தையும் வங்கதேச தலைவருமான ஷேக் முஜிபூர் ரஹ்மான், இந்திரா காந்தியுடன் இணக்கமான சுமூகமான உறவைக் கொண்டவர். 1971ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான வங்கதேச விடுதலைப் போராட்டத்தில் இந்திரா காந்தி வங்கதேசத்துக்கு பெரிதும் உதவியாக இருந்தார். அதன் விளைவாக காந்தி குடும்பத்தின் மீது அவர்களுக்கு இணக்கமான பற்று மற்றும் நன்றியுனர்வை வெளிப்படுத்தும் வகையில் பரஸ்பர மரியாதையையும் நீடித்து வருகிறது.

பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் பிரதமராக தொடர்ந்து 3வது முறையாக பதவியேற்றார். அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா தனது அமைச்சரவை உறுப்பினர்கள் சிலருடன் தில்லிக்கு வருகை புரிந்தார்.

வங்கதேச பிரதமருடன் சோனியா காந்தி,

வங்கதேச பிரதமருடன் சோனியா காந்தி,

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.