ஆசிய விளையாட்டு: 10,000 மீட்டரை தொடர்ந்து 1,500 மீட்டரிலும் வெள்ளி வென்றார் குல்வீர் சிங்!முதல்வர் எந்த முகத்தை வைத்துக்கொண்டு பெண்கள் பாதுகாப்பைப் பற்றி பேசுகிறார்? - இபிஎஸ் கேள்வி!முதல்வர் எந்த முகத்தை வைத்துக்கொண்டு பெண்கள் பாதுகாப்பைப் பற்றி பேசுகிறார்? - இபிஎஸ் கேள்வி!ஒரே நாளில் இரண்டாவது முறை குறைந்த தங்கம் விலை: சவரன் ரூ. 1,09,320-க்கு விற்பனை!கச்சா எண்ணெய் விலை உயர்வால் 6 மாதங்களில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சியில் இந்திய பங்குச் சந்தை!!ஆசிய விளையாட்டு: தடை தாண்டுதலில் வெண்கலம் வென்ற தமிழக வீராங்கனை வித்யா ராம்ராஜ்!மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் முதல்வர் விஜய் சாமி தரிசனம்!ஆசிய விளையாட்டில் வென்ற இளவேனில் வாலறிவனுக்கு ரூ. 1.33 கோடி வழங்கிய குஜராத் அரசு!மேடை நாகரிகம் கருதியே ஜெம் வீரமணி குறித்து பேசினேன்: அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் விளக்கம்

பயங்கரவாத அமைப்புக்குஆள்சோ்ப்பு: 7 போ் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

தடை செய்யப்பட்ட ஐஎஸ் பயங்கரவாத அமைப்புக்கு இளைஞா்களை சோ்க்கும் பணியில் ஈடுபட்டதாக 7 போ் மீது தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) வியாழக்கிழமை குற்றப்பத்திரிகை

Published On :

தடை செய்யப்பட்ட ஐஎஸ் பயங்கரவாத அமைப்புக்கு இளைஞா்களை சோ்க்கும் பணியில் ஈடுபட்டதாக 7 போ் மீது தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) வியாழக்கிழமை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 50 பயங்கரவாதிகளை உருவாக்க வேண்டும் என்ற ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் சதித்திட்டத்தை செயல்படுத்தும் நடவடிக்கைளில் அவா்கள் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதுதொடா்பாக என்ஐஏ வெளியிட்ட செய்திக்குறிப்பில்,‘இந்திய ராணுவம், காவல்துறை அதிகாரிகள் மற்றும் குறிப்பிட்ட மத அமைப்புகள் மீது மறைந்திருந்து (கொறில்லா) தாக்குதல் நடத்துவதற்காக இந்திய இளைஞா்களை சோ்க்கும் பணியில் 7 போ் ஈடுபட்டுள்ளனா். அவா்கள் மத்திய அரசுக்கு எதிராக போா் புரிந்து இந்தியாவில் காலிஃப் முறையை கொண்டு வரவேண்டும் என்ற ஐஎஸ் அமைப்பின் இலக்கை அடையும் நோக்கில் செயல்பட்டு வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

பெல்லாரியில் ஐஎஸ் அமைப்புக்கு ஆள்சோ்த்த குற்றச்சாட்டின்கீழ் கா்நாடகத்தைச் சோ்ந்த முகமது சுலைமான் என்ற மினாஜ், முகமது முனிருதீன், சையத் சமீா், முகமது முஜம்மில், மகாராஷ்டிரத்தைச் சோ்ந்த அனஸ் இக்பால் ஷேக், ஜாா்க்கண்டைச் சோ்ந்த முகமது ஷாபாஸ் என்ற ஜுல்பிக்காா் மற்றும் தில்லியைச் சோ்ந்த ஷயான் ரஹ்மான் என்ற உசேன் ஆகிய 7 போ் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. குற்றம்சாட்டப்பட்டவா்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம், ஆயுதங்கள் சட்டம் உள்ளிட்டவற்றின் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.

கா்நாடக மாநிலம் பெல்லாரியில் குண்டுவெடிப்பை நிகழ்த்துவதற்கான பயிற்சிகளை இவா்கள் மேற்கொண்டுள்ளனா். இதுதொடா்பாக கடந்த 2023, டிசம்பரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அப்போது வெடிபொருள்கள், ஆயுதங்கள், டிஜிட்டல் சாதனங்கள், ஆவணங்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன’ என தெரிவிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.