கோயிலுக்குள் பசுவின் துண்டித்த தலை வீச்சு! மத்தியப் பிரதேசத்தில் 4 பேர் கைது
மத்தியப் பிரதேசத்தில் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


மத்தியப் பிரதேசத்தின் ஜாரா நகரில் உள்ள ஒரு கோயிலில் பசுவின் துண்டிக்கப்பட்ட தலையை வீசிய நான்கு பேர் கடுமையான தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த நபர்கள் வெள்ளிக்கிழமை அதிகாலையில் பசு மாட்டினை கொன்று அதன் உடல் பாகங்களை கோயில் வளாகத்தில் வீசி எறிந்ததாகக் கூறப்படுகிறது. இது ரத்லம் மாவட்டத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து காவல்துறைத் துணைத்தலைவர் மனோஜ் குமார் சிங் கூறுகையில், “மத உணர்வுகளை புண்படுத்தியதற்காகவும், இன்னும் பிற குற்றங்களுக்காகவும் இந்திய தண்டனைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் சல்மான் மேவதி (24), ஷாகிர் குரேஷி (19) நோஷாத் குரேஷி (40) மற்றும் ஷாருக் சத்தார் (25) ஆகியோர் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளர்.
மேலும், நோஷாத் மீது 20 வழக்குகள் உள்ளன. அவர்கள் அந்தப் பகுதியில் அமைதி, நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் முயற்சியை மேற்கொண்டனர். இருப்பினும், சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளால் எந்தவித அசாம்பாவிதமும் நடைபெறவில்லை.
மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ், காவல்துறை மற்றும் நிர்வாகத்தை கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டார்” என்றார்.
வெள்ளிக்கிழமை நடந்த சம்பவத்திற்குப் பிறகு, சில ஹிந்து அமைப்புகள் போராட்டம் நடத்த அழைப்பு விடுத்துள்ளன. இந்த சம்பவத்தையடுத்து நகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...