காதலியை பட்டப்பகலில் ஸ்பேனரால் அடித்துக் கொன்ற இளைஞர்!

மும்பையின் பரபரப்பான சாலையில் நடந்து சென்ற பெண்ணை அடித்துக் கொன்றவர் கைது
காதலியை பட்டப்பகலில் ஸ்பேனரால் அடித்துக் கொன்ற இளைஞர்!
dot com
Updated on
1 min read

மும்பையில், ஒருவர் தனது முன்னாள் காதலியை அடித்துக் கொல்லும் சிசிடிவி காட்சிகள் வைரலாகி வருகின்றன.

மும்பையில் ஆர்த்தி யாதவ் மற்றும் ரோஹித் யாதவ் இருவரும் காதலித்து வந்துள்ளனர். இதற்கிடையில், இருவரும் தங்கள் காதல் உறவினை முறித்துக் கொண்டுள்ளனர். இதனால், மனஉளைச்சலுக்கு ஆளாக்கப்பட்ட ரோஹித், ஆர்த்தி வேறு யாரேனுடனும் தொடர்பில் உள்ளாரா என்ற சந்தேகத்தில் நேற்று காலையில் அடித்து கொன்றுள்ளார்.

மும்பையின் வசாய் பகுதி அருகே பரபரப்பான சாலையில், நேற்று (ஜூன் 18) காலை 8:30 மணியளவில் ஆர்த்தி யாதவ் வேலைக்கு செல்வதற்காக நடந்து சென்றுள்ளார். அவரைப் பின்தொடர்ந்து வந்த அவரது முன்னாள் காதலர் ரோஹித் யாதவ், ஆர்த்தியை பின்னிருந்து இரும்பு ஸ்பேனரால் பலமாகத் தாக்கியுள்ளார். ரோஹித் தாக்கியதில், ஆர்த்தி நிலைகுலைந்து கீழே விழுந்தார். ரோஹித் ஸ்பேனரைக் கொண்டு, அடுத்தடுத்து ஆர்த்தியைத் தாக்கிக் கொண்டேயிருந்தார்.

ரோஹித்தின் இந்த வெறிச்செயலை, அந்த வழியே நடந்து சென்ற பாதசாரிகளும், வாகன ஓட்டிகளும் யாரும் தடுக்க முன்வரவில்லை. இருப்பினும், அடையாளம் தெரியாத ஒருவர் மட்டும் ரோஹித்தை தடுக்க முன்வந்தார். அவரையும் ரோஹித் தள்ளிவிட்டு, ஸ்பேனரை வைத்து மிரட்டியுள்ளார். ஆர்த்தி சாகும்வரை தொடர்ந்து தாக்கிக்கொண்டே இருந்தார்.

காதலியை பட்டப்பகலில் ஸ்பேனரால் அடித்துக் கொன்ற இளைஞர்!
ஜம்மு - காஷ்மீரின் பூஞ்ச்சில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை

ஆர்த்தி உயிரிழந்தபின், ரோஹித் ஆர்த்தியின் முகத்தைப் பார்த்து, "ஏன் இப்படிச் செய்தாய், ஏன் இப்படிச் செய்தாய்?” என்று இந்தியில் கத்துகிறார். பின்னர், ஆர்த்தியின் ரத்தம் வழிகின்ற அந்த ஸ்பானரை, அங்கிருந்த கூட்டத்தின் நடுவே வீசிவிட்டு செல்கிறார். இந்த சம்பவத்தினையடுத்து, தகவல் அறிந்த காவல்துறையினர் ரோஹித் மீது வழக்குப்பதிவு செய்து, கைது செய்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com