ஹிமாசலில் முன்னாள் எம்.எல்.ஏ மீதான தாக்குதலில் ஈடுபட்டவர் நீதிமன்ற வளாகத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார். மற்றொருவர் காயங்களுடன் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக காவல்துறை அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனர்.
ஹிமாசலப் பிரதேசத்தின் பிலாஸ்பூர் சட்டபேரவைத் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ.வான காங்கிரஸ் தலைவர் பாம்பர் தாக்கூர் மீது இந்தாண்டு பிப்ரவரி 23 ஆம் தேதி தாக்குதல் நடத்தப்பட்டது. திலீப் பில்ட்கான் நிறுவனத்தின் பொது மேலாளரின் அலுவலகத்திற்குள் சிலருடன் வாக்குவாதம் ஏற்பட்டதால் பாம்பர் தாக்கூர் தாக்கப்பட்டார்.
இந்த வழக்கில் தொடர்புடைய 13 பேரில் ஒருவரான சௌரப் பாட்டியல் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கி சூடு நடத்தினர்.
சௌரப் பாட்டியல் விசாரணைக்காக நீதிமன்றத்திற்கு வந்தபோது சுடப்பட்ட அவர் உடனடியாக உள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக பிலாஸ்பூர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இதுகுறித்து பிலாஸ்பூர் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் மதன் திமான் கூறுகையில், “தாக்குதல் நடத்திய இரண்டு பேரில், ஒருவர் போலீசாரால் கைதுசெய்யப்பட்டார். மற்றொருவரை தேடும் பணிகள் நடைபெற்று வருகின்றது. கைது செய்யப்பட்டவர் பஞ்சாபின் லூதியானாவைச் சேர்ந்த சன்னி கில் என அடையாளம் காணப்பட்டுள்ளது. மேலும், இதுதொடர்பான விசாரணைகள் நடைபெற்று வருகிறது” என்றார்.