விதித் வர்ஷ்னே என்பவர், ஜூன் 18ஆம் தேதியில் ’வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் ரயிலில், போபாலில் இருந்து ஆக்ராவுக்கு அவரது குடும்பத்தினருடன் சென்றுள்ளார். அப்போது, ரயிலில் அவர்களுக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது. விதித்தின் உறவினர்களுக்கு வழங்கப்பட்ட உணவில் கரப்பான் பூச்சி ஒன்று இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.
உணவில் கரப்பான் பூச்சி இருப்பதைக் கண்டு, விதித் தனது மொபைலில் புகைப்படம் எடுத்து, அதனை அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், ரயிலில் உணவு விநியோகிக்கும் நிர்வாகத்தினர் மீது நடவடிக்கை எடுக்குமாறு ரயில் போக்குவரத்துத் துறை அமைச்சகத்தையும், ரயில் போக்குவரத்துத்துறை அமைச்சரையும் மேற்கோள்காட்டி, புகார் அளித்திருந்தார்.
ஆனால், விதித் ஜூன் 18ஆம் தேதி அளித்த புகாருக்கு இரண்டு நாள்களுக்குப் பிறகு, இந்திய ரயில் உணவு வழங்கல் மற்றும் சுற்றுலாக் கழகமும், ரயில் போக்குவரத்துத் துறையும் மன்னிப்புக் கோரியதுடன், இந்த சம்பவத்தில் தொடர்பானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் அவர்களது அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.
ஐ.ஆர்.சி.டி.சி.யின் எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, ”உங்கள் பயணத்தில் ஏற்பட்ட கசப்பான அனுபவத்திற்கு நாங்கள் மன்னிப்பு கோருகிறோம். இந்த விஷயம் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்பட்டதுடன், இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட உணவு சேவை வழங்குபவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளனர்.
கடந்த ஜனவரி மாதத்தில், புதுதில்லியில் இருந்து வாரணாசிக்குச் சென்ற வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த பயணிகளுக்கு, பழைய உணவு வழங்கப்பட்டதாக புகார் அளித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

கேரளத்தில் ‘வந்தே பாரத்’ மீது் மீண்டும் கல்வீச்சு: ஜன்னல் கண்ணாடிகள் சேதம்; பயணிகள் தப்பினா்

இந்தியர்களின் உணவில் புரட்சி செய்திருக்கும் புரதம்! நல்லதா? கெட்டதா?

சீனா, ஜப்பான், பிரான்ஸைவிட வந்தே பாரத் ரயில் கட்டணம் குறைவு - ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ்

ராமேசுவரத்திலிருந்து அடுத்த மாதம் வந்தே பாரத் ரயில் இயக்க வாய்ப்பு
வீடியோக்கள்

பணம் கொண்டு செல்வதற்கான கட்டுப்பாடுகள், தேர்தல் நடத்தை விதிகள் பற்றி விளக்கிய Archana Patnaik
தினமணி வீடியோ செய்தி...

திமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீட்டில் சிக்கலா? | DMK Alliance | MK Stalin | N Ramasubramanian
தினமணி வீடியோ செய்தி...

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

நாகபந்தம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

