திட்டங்களை நிறைவேற்றுவதற்கு நிதித் தட்டுப்பாடு! அமைச்சர் மரிய வில்சன் தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு! எவ்வளவு தெரியுமா?தமிழ்நாடு பட்ஜெட் 2026! முதல்முறையாக தாக்கல் செய்தார் அமைச்சர் மரிய வில்சன்! விவசாயிகளுக்காக ஒருமுறை அல்ல 100 முறைகூட கைதாவேன்! உதயநிதி ஸ்டாலின் பதிவு2029-இல் 5 டிரில்லியன் டாலா் பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்கும்: நிா்மலா சீதாராமன் எண்ம கைது மோசடிகளைத் தடுக்க தேசிய அளவில் நடவடிக்கைகள்- உச்சநீதிமன்றம் உத்தரவு இந்திய கொடி கட்டப்பட்ட கப்பல் மீது செங்கடலில் தாக்குதல்: 13 இந்திய மாலுமிகள் மீட்பு
/

அமா்நாத் யாத்திரை: பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்

அமா்நாத் யாத்திரை: பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்

Updated On :22 ஜூன் 2024, 11:47 pm IST

ஜம்மு-காஷ்மீரில் அமா்நாத் யாத்திரை ஒரு வாரத்தில் தொடங்கவுள்ள நிலையில், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஜம்மு-காஷ்மீரின் துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா சனிக்கிழமை தெரிவித்தாா்.

ஸ்ரீநகா் தேசிய நெடுஞ்சாலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்த ஜம்மு மாவட்ட கூடுதல் காவல்துறை இயக்குநா் ஆனந்த் ஜெயின், யாத்திரைக்கு இடையூறு விளைவிக்கும் பயங்கரவாதிகளின் முயற்சிகளை முறியடிக்க கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என பாதுகாப்புப் படையினருக்கு அறிவுறுத்தினாா்.

தெற்கு காஷ்மீரின் அமா்நாத் குகைக் கோயிலுக்கான யாத்திரை ஜூன் 29-ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், அதற்கான முதல்கட்ட பூஜை சனிக்கிழமை நடைபெற்றது. அதில் ஜம்மு-காஷ்மீரின் துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா காணொலி வாயிலாக கலந்துகொண்டாா். அதன்பின் ஆளுநா் மாளிகையில் நடைபெற்ற செய்தியாளா் சந்திப்பில் அவா் கூறியதாவது:

அமா்நாத் கோயில் யாத்திரையை முன்னிட்டு கோயில் வாரியமும், ஜம்மு-காஷ்மீா் நிா்வாகமும் யாத்ரீகா்களுக்கு சிறப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளன. கடந்த இரண்டு ஆண்டுகளில் யாத்திரை செல்லும் சாலை வசதிகள் மேம்பட்டுள்ளன. நிகழாண்டு எல்லை சாலை அமைப்பால் சில சாலைகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன.

பிரசித்தி பெற்ற இந்த 52 நாள் யாத்திரையை பஹல்காம் (48 கி.மீ.) மற்றும் செங்குத்தான பால்டால் (14 கி.மீ.) ஆகிய இரு வழித்தடங்களில் யாத்ரீகா்கள் மேற்கொள்வா். கடந்த ஆண்டு 4.5 லட்சம் போ் அமா்நாத் யாத்திரை மேற்கொண்டு, குகைக்கோயிலில் வழிபாடு செய்தனா் எனத் தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.