
மக்களவைத் தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓம் பிர்லாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரதமர் மோடி தன்னுடைய எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளப் பதிவில், “மக்களவைத் தலைவராக இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஓம் பிர்லாவுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது உள்நோக்குத் திறன் மற்றும் அனுபவத்தால் மக்களவை பெரிதும் பயனடையும். அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். மக்களவைத் தலைவர் அவசரநிலையை வன்மையாகக் கண்டித்ததற்கும், அந்தக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட அத்துமீறல்களை எடுத்துரைத்ததற்கும், ஜனநாயகத்தின் கழுத்தை நெரிப்பது போல அதன் வளர்ச்சியைத் தடுத்து நிறுத்தும் விதத்தை குறிப்பிட்டதற்கும் நான் மகிழ்ச்சியடைகிறேன்.
அந்த நாட்களில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் மரியாதை செலுத்தும் வகையில் அமைதியாக எழுந்து நிற்பது ஒரு அற்புதமான நிகழ்வாகும்.
50 ஆண்டுகளுக்கு முன்பு அவசரநிலை அமல்படுத்தப்பட்டது. ஆனால், இன்றைய இளைஞர்கள் அதைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டியது முக்கியமானதாகும். அவசரநிலையின் போது நடந்த சம்பவங்கள் சர்வாதிகாரம் எப்படி இருக்கும் என்பதை எடுத்துக்காட்டுகிறது. ஏனென்றால் அரசியலமைப்பை மதிக்காமல், பொதுமக்களின் கருத்துகளையும் கேட்காமல் அனைத்து நிறுவனங்கள் அழிக்கப்படும் போது என்ன நடக்கும் என்பதற்கு இது ஒரு உதாரணம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, அவசரநிலையின் போது நாடே சிறைச் சாலை போன்று மாறியது. அவசர நிலை பிரகடனம் அரசியல் சாசனம் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல் என மக்களவையில் தலைவர் ஓம் பிர்லா கூறியிருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.