திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

ராமர் கோயிலிலும் கசிவு; வினாத்தாளும் கசிவு: உத்தவ் தாக்கரே

அமராவதியில் சராசரியாக நாள்தோறும் ஒரு விவசாயி தற்கொலை.

News image
உத்தவ் தாக்கரே
Updated On :27 ஜூன் 2024, 8:13 am

DIN

மகாராஷ்டிர மாநிலத்தின் மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியுள்ள நிலையில், சிவசேனை (உத்தவ் அணி) தலைவர் உத்தரவ் தாக்கரே செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:

“சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியுள்ளது. ஆனால், இந்த அரசாங்கத்தை மக்கள் வழியனுப்ப தயாராகவுள்ளனர். நாளை நிதிநிலை அறிக்கை அரசால் தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்த அரசின் கடைசி அமர்வில் சில அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளது. அறிவிப்புகள் மழைப்போல் பொழிந்தாலும், நடைமுறை வறட்சியாகவே உள்ளது.

இரட்டை எஞ்சின் அரசு என்று கூறப்படுகிறது. ஆனால், இது ஒரு கசிவு அரசாங்கம். ராமர் கோயிலிலும் கசிவு ஏற்படுகிறது, வினாத்தாள் விவகாரத்திலும் கசிவு ஏற்பட்டுள்ளது.

மாநிலத்தின் விவசாயிகள் வேதனையில் உள்ளனர். அமராவதி மாவட்டத்தில் மட்டும் நாள்தோறும் சராசரியாக ஒரு விவசாயி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.” என்று விமர்சித்துள்ளார்.

இளநிலை நீட், யுஜிசி நெட் தேர்வுகளின் வினாத்தாள் கசிந்ததாக புகார் எழுந்துள்ள நிலையில், அயோத்தி ராமா் கோயில் கருவறையின் மேற்கூரையில் இருந்து அதிக அளவில் மழைநீா் கசிவதாக அக்கோயிலின் தலைமை அா்ச்சகா் ஆச்சாரிய சத்தியேந்திர தாஸ் திங்கள்கிழமை புகாா் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.