இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

காங்கிரஸில் இணைந்த பிஆர்எஸ் எம்.எல்.ஏ.! 4 மாதங்களில் 6வது உறுப்பினர்!

கடந்த 4 மாதங்களில் பிஆர்எஸ் கட்சியிலிருந்து விலகி காங்கிரஸில் இணைந்த 6வது உறுப்பினர் யாதையா.

News image
காங்கிரஸில் இணைந்த பிஆர்எஸ் எம்.எல்.ஏ காலே யாதையா
Updated On :28 ஜூன் 2024, 1:54 pm

DIN

பாரத ராஷ்ட்ர சமிதி கட்சியைச் சேர்ந்த மற்றொரு எம்.எல்.ஏ. காங்கிரஸ் கட்சியின் இன்று (ஜூன் 28) இணைந்தார்.

ஏற்கெனவே 5 எம்.எல்.ஏ.க்கள் பிஆர்எஸ் கட்சியிலிருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்த நிலையில், தற்போது 6வது உறுப்பினர் காங்கிரஸ் கட்சியின் இணைந்துள்ளார்.

தில்லியில் உள்ள தலைமை அலுவலகத்தில் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, மற்றும் காங்கிரஸ் பொறுப்பாளர் தீபா தாஸ்முன்ஷி உள்ளிட்ட தலைவர்கள் முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

ரங்காரெட்டி மாவட்டத்தின் செவெல்லா தொகுதியில் போட்டியிட்டு வென்றவர் காலே யாதையா. 62 வயதாகும் அவர், 2014ஆம் ஆண்டுமுதல் அத்தொகுதியின் உறுப்பினராக உள்ளார்.

கடந்த 4 மாதங்களில் பிஆர்எஸ் கட்சியிலிருந்து விலகி காங்கிரஸில் இணைந்த 6வது உறுப்பினர் யாதையா.

இதற்கு முன்பு, கடந்த வாரத்தில் மட்டும் 3 எம்.எல்.ஏ.க்கள் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். பிஆர்எஸ் கட்சியின் மூத்த தலைவர்களும் உறுப்பினர்களும் 2023 டிசம்பர் மாதம் முதலே காங்கிரஸ் பக்கம் சாய்ந்து வருகின்றனர்.

2015ஆம் ஆண்டு பாரத ராஷ்ட்ர சமிதி கட்சியிலிருந்து விலகி காங்கிரஸில் இணைந்த காலே யாதையா, 2018-ல் பிஆர்எஸ் கட்சியில் இணைந்து தேர்தலில் வெற்றி பெற்றார். 2023-ல் காங்கிரஸ் வேட்பாளரைத் தோற்கடித்து பிஆர்எஸ் சார்பில் வெற்றி பெற்று 3வது முறையாக எம்.எல்.ஏ. ஆனார். தற்போது மீண்டும் காங்கிரஸில் இணைந்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.