தில்லி எல்லைகளில் வலிமையைக் கூட்டுவோம்: விவசாயிகள் சங்கம்

மார்ச் 10 - நண்பகல் 12 முதல் 4 மணி வரை தேசிய அளவில் போராட்டத்தில் ஈடுபடத் திட்டம்.
தில்லி எல்லைகளில் வலிமையைக் கூட்டுவோம்: விவசாயிகள் சங்கம்

தில்லி எல்லைகளில் வலிமையைக் கூட்டும் வகையில், நாட்டின் பல்வேறு பகுதிகளிலிலுள்ள விவசாய சங்கங்கள் தில்லிக்கு வருகைத்தரவுள்ளதாக விவசாயிகள் சங்கத் தலைவர் ஜக்ஜித் சிங் தல்லேவால் தெரிவித்துள்ளார்.

தில்லியில் இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஜக்ஜித் சிங், தில்லியை நோக்கிய எங்கள் பேரணி திட்டமிட்டபடி நடைபெறும். ஒருபோதும் பின்வாங்கப்போவதில்லை. தில்லி எல்லைகளில் எங்கள் வலிமையை அதிகரிக்க வேண்டும் எனத் திட்டமிட்டுள்ளோம்.

விமானம், ரயில், பேருந்துகளில் பயணித்து மார்ச் 6ஆம் தேதி தில்லிக்கு விவசாயிகள் பலர் வருகைத்தரவுள்ளனர். அவர்களை போராட்டத்தில் அமர, மத்திய அரசு அனுமதிக்கிறதா என்பதை பொருத்திருந்து பார்க்க வேண்டும். மார்ச் 10ஆம் தேதி நண்பகல் 12 முதல் 4 மணி வரை தேசிய அளவில் போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம் எனக் குறிப்பிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com