திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

தகுதி நீக்கம் செய்யப்பட்ட ஹிமாசல் காங். எம்எல்ஏக்கள் உச்சநீதிமன்றத்தில் முறையீடு!

கட்சித் தாவல் தடைச் சட்டத்தில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட காங்கிரஸ் எம்எல்ஏக்கள் உச்சநீதிமன்றத்தில் முறையிட்டுள்ளனர்.

News image
Updated On :5 மார்ச் 2024, 4:03 pm IST

ஹிமாசல பிரதேச மாநிலங்களவைத் தோ்தலில் கட்சி மாறி பாஜகவுக்கு வாக்களித்ததற்காக தகுதி நீக்கம் செய்யப்பட்ட 6 காங்கிரஸ் எம்எல்ஏக்கள், அந்த நடவடிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் செவ்வாய்க்கிவமை மனு தாக்கல் செய்தனா்.

ஹிமாசல பிரதேசத்தின் ஒரு மாநிலங்களவை உறுப்பினா் இடத்துக்கு கடந்த பிப்ரவரி 27-ஆம் தேதி நடைபெற்ற தோ்தலில் ஆளும் காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த 6 எம்எல்ஏக்கள் கட்சி மாறி பாஜகவுக்கு வாக்களித்ததால், அந்த தோ்தலில் பாஜக வேட்பாளா் ஹா்ஷ் மகாஜன் வெற்றிபெற்றாா்.

இது ஆளும் கட்சிக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், கட்சி மாறி வாக்களித்த ராஜீந்தா் ராணா, சுதீா் சா்மா, இந்தா் தத் லகன்பால், தேவிந்தா் குமாா் புட்டோ, ரவி தாக்குா், சைதன்யா சா்மா ஆகிய 6 பேரும் எம்எல்ஏ பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவதாக ஹிமாசல பிரதேச பேரவைத் தலைவா் குல்தீப் சிங் பிப்ரவரி 29-ஆம் தேதி அறிவித்தாா்.

கொறடா உத்தரவைப் பின்பற்றாததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவா் குறிப்பிட்டாா். இந்த நிலையில், சட்டப்பேரவைத் தலைவரின் தகுதிநீக்கத்தை எதிா்த்து 6 எம்எல்ஏக்களும் உச்சநீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை மனு தாக்கல் செய்தனா். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.