ஐபிஎல் சூதாட்டத்தில் பணம் இழந்த கணவர்: மனைவி தற்கொலை!

கணவனின் சூதாட்ட விருப்பம், கடன் தொல்லையால் மனைவி உயிரிழப்பு
மாதிரி படம்
மாதிரி படம்ENS

ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டத்தால் கணவர் ரூ.1 கோடிக்கும் மேல் கடன்பட்டதால் கடனளித்தவர்களின் தொந்தரவு தாங்க இயலாமல் பெங்களூரில் மனைவி தற்கொலை செய்து உயிரிழந்ததாக காவலர்கள் தெரிவித்தனர்.

தர்ஷன் பாபு, பொறியாளரான இவர் 2021-ம் ஆண்டு முதல் ஐபிஎல் போட்டிகளை வைத்து நடத்தப்படும் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். பணம் குறைவாக இருக்கும்போதும் பந்தயத்தில் தோற்ற பிறகும் இவர் கடன் வாங்கியுள்ளார்.

கடன் கொடுத்தவர்களால் தொடர்ச்சியாக தொந்தரவு அளிக்கப்பட்டதாகவும் அதனால் 23 வயதான அவரது மனைவி ரஞ்சனி தூக்கிட்டு இறந்ததாகவும் கூறப்படுகிறது.

கிரிக்கெட் பந்தயத்திற்கு தர்ஷன் ரூ.1.5 கோடி வரை கடன் பெற்றதாகவும் அதில் ரூ.1 கோடி திருப்பியளித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இன்னமும் அவருக்கு ரூ.84 லட்சம் கடன் இருப்பதாக காவலர்கள் தெரிவித்தனர்.

2020-ல் தர்ஷன் - ரஞ்சிதா திருமணம் நடைபெற்றது. இணையருக்கு இரண்டு வயது மகன் உள்ளார்.

ரஞ்சிதாவின் தந்தை வெங்கடேஷ் காவலர்களிடம் புகாரளித்துள்ளார். தன் மகள் கடனளித்தவர்களால் தொடர்ச்சியாக தொந்தரவுக்கு உள்ளானதாகவும் 13 பேரின் பெயரையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தன் மருமகன் தர்ஷனுக்கு, நிச்சயமாக பணம் ஜெயித்துவிடலாம் என ஆசைகாட்டி அவரிடம் போலியான காசோலை பெற்றுக்கொண்டு பந்தயத்தில் ஈடுபட செய்ததாகவும் பெண்ணின் தந்தை குறிப்பிட்டுள்ளார்.

ரஞ்சனியின் தற்கொலை குறிப்பை காவலர்கள் மீட்டுள்ளனர். இது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக பெங்களூரு காவல்துறையினர் தெரிவித்தனர்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050]

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com