100 நாள் வேலைத் திட்டம் ஊதியம் உயர்வு: தமிழகத்துக்கு ரூ.319!

மறுவரையறுக்கப்பட்ட ஊதிய பட்டியலின்படி நாளொன்றுக்கு அதிகபட்சமாக ஹரியாணா, சிக்கிம் மாநிலத்துக்கு ரூ. 374 நிர்ணயம்.
100 நாள் வேலைத் திட்டம் ஊதியம் உயர்வு: தமிழகத்துக்கு ரூ.319!

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகத்துக்கு தற்போது நாளொன்றுக்கு ரூ.294 வழங்கப்பட்டு வரும் நிலையில், ரூ.319-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக ஹரியாணா மற்றும் சிக்கிம் மாநிலங்களுக்கு நாளொன்றுக்கு ரூ.374 ஆக ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கோவாவுக்கு ரூ.356, நிக்கோபாருக்கு ரூ.347, அந்தமானுக்கு ரூ.329, புதுச்சேரிக்கு ரூ.319, லட்சத்தீவுக்கு ரூ.315 ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

100 நாள் வேலைத் திட்டம் ஊதியம் உயர்வு: தமிழகத்துக்கு ரூ.319!
திகாரில் அடைக்கப்படுகிறாரா கேஜரிவால்?

தமிழகத்தின் அண்டை மாநிலங்களான கேரளத்துக்கு ரூ.346, ஆந்திரம் மற்றும் தெலங்கானாவுக்கு ரூ.300, கர்நாடகத்துக்கு ரூ.349-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும்போது மத்திய அரசின் அரசாணை விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com