
மும்பை மாநகர காவல் துறை முன்னாள் தலைவர் அருப் பட்நாயக், ஒடிசா மாநிலத்தின் புரி தொகுதியில் பிஜு தனதா தள வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2019ம் ஆண்டு புவனேஸ்வர் தொகுதியில் தோல்வியடைந்த இவர், தற்போது சொந்த ஊரான புரி தொகுதியில் போட்டியிடுகிறார்.
ஒடிசாவைச் சேர்ந்த அருப் பட்நாயக், 1979ம் பணிநிலைப் பிரிவைச் (பேட்ஜ்) சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரியாவார். சட்டம் - ஒழுங்கை பேணிக் காப்பதில் இவர் சிறந்தவர்.
2004ம் ஆண்டு அக்ஷய் குமார் நடிப்பில் வெளியான மென் இன் ஆக்ஷன் படத்தில் இடம்பெற்றிருந்த டிசிபி ஹரி ஓம் பட்நாயக் என்ற பாத்திரம், அருப் பட்நாயக்கின் நிஜ வாழ்க்கை ஈர்ப்பில் அமைக்கப்பட்டது.
1993 மும்பை தொடர் வெடிகுண்டு வழக்கு, ஹர்ஷா மேத்தா ஊழல் உள்ளிட்ட வழக்குகளை சிறப்பாக கையாண்டவர். 2011ம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு இவர் தலைமையில் பாதுகாப்பு வழங்கப்பட்டது (இலங்கைக்கு எதிரான போட்டியில் இந்தியா வெற்றி பெற்றிருந்தது).
தற்போது மதிப்பு மிக்க புரி மக்களவைத் தொகுதியில் பிஜு ஜனதா தளம் சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இவருக்கு எதிராக பாஜகவின் சம்பித் பத்ரா போட்டியிடுகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.