விரைவில் முழு பட்ஜெட்டிற்கான பணிகள்: நிர்மலா சீதாராமன்

முழு பட்ஜெட்டிற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
விரைவில் முழு பட்ஜெட்டிற்கான பணிகள்: நிர்மலா சீதாராமன்

பிரதமர் நரேந்திர மோடி பெரும்பான்மையுடன் வென்று மீண்டும் பிரதமராக பதவியேற்பார் என்றும், 2024-25 ஆம் ஆண்டுக்கான முழு பட்ஜெட்டிற்கான பணிகள் புதிய அரசு அமைந்தவுடன் தொடங்கப்படும் என்றும் பாஜக நம்பிக்கையாக உள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

‘அபெக்ஸ் பிசினஸ் சேம்பர்’ சிஐஐயின் வருடாந்திர நிகழ்ச்சியில் உரையாற்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், உலகிலேயே வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா உருவெடுத்துள்ளது, அடுத்த சில ஆண்டுகளில் அதே வேகத்தில் மேலும் வளர்ச்சியடைந்த நாடாக இந்தியா இருக்கும் என்றார்.

அடுத்த ஐந்து ஆண்டுகளில் உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 18 சதவிகிதம் இந்தியா பங்காற்றும் என்று சர்வதேச நாணய நிதியம்(ஐஎம்எஃப்) எதிர்பார்க்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.

அரசுக் கொள்கைகளில் எந்தவிதமான ஏற்ற இறக்கமும் இல்லாமல் இருப்பதும், ஊழலற்ற முடிகளாலும் உயர் பொருளாதார வளர்ச்சிக்கு அடிப்படைக் காரணம் என்று நிதியமைச்சர் கூறினார்.

அரசின் பிஎல்ஐ(பிஎல்ஐ) திட்டம் ஸ்மார்ட்போன் எலக்ட்ரானிக்ஸ் துறையை மாற்றியமைத்ததை அவர் எடுத்துரைத்தார்.

விரைவில் முழு பட்ஜெட்டிற்கான பணிகள்: நிர்மலா சீதாராமன்
நடந்தது இதுதான்: ஸ்வாதி மாலிவால் கொடுத்த வாக்குமூலம்!

"2014 இல் செல்போன்களுக்கான இறக்குமதி சார்பு 78 சதவீதமாக இருந்தது, இன்று 99 சதவீத செல்போன்கள் இந்தியாவில் தயாரிக்கப்படுகின்றன," என்று அவர் குறிப்பிட்டார்.

பிப்ரவரியில் அரசு வாக்குப்பதிவு கணக்கை மட்டுமே முன்வைத்துள்ளதாகவும், புதிய அரசாங்கம் பொறுப்பேற்றவுடன் பொருளாதார வளர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் வகையில் முழு பட்ஜெட்டிற்க்கான வேலைகள் மேற்கொள்ளப்படும் என்றும் நிதியமைச்சர் கூறினார்.

"2047 ஆம் ஆண்டிற்குள் வளர்ச்சியடைந்த நாடாக மாற வேண்டும் என்ற இலக்கில் தனியார் துறைக்கு அரசு மிகப் பெரிய பங்களிப்பை வழங்குகின்றது" என்று அவர் கூறினார்.

மேலும் இந்தியாவின் நுகர்வோர் சந்தை 2031ஆம் ஆண்டுக்குள் இரட்டிப்பாகும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com