ஆம் ஆத்மி போராட்டம்: தில்லியில் 144 தடை!

ஆம் ஆத்மி கட்சியினரின் போராட்டம் காரணமாக தில்லி பாஜக தலைமை அலுவலகப் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பட்டுள்ளது.
ஆம் ஆத்மி போராட்டம்: தில்லியில் 144 தடை!
Published on
Updated on
1 min read

ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினா் ஸ்வாதி மாலிவாலை முதல்வா் கேஜரிவாலின் உதவியாளர் பிபவ் குமார் தாக்கியதாகக் கூறப்படும் வழக்கில் அவரை தில்லி காவல் துறையினா் சனிக்கிழமை கைது செய்தனர்.

அவா் கைது செய்யப்பட்ட சில நிமிடங்களிலேயே அது குறித்து கேஜரிவால் தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் தனது கருத்தை காணொலி வடிவில் பகிா்ந்தார்.

அதில், ஆம் ஆத்மி கட்சித் தலைவா்கள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் இன்று (மே 19) தில்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் திரளுமாறு முதல்வா் அரவிந்த் கேஜரிவால் கோரிக்கை விடுத்து இருந்தார்.

இதனைத் தொடர்ந்து, இன்று தில்லி உள்ள ஆம் ஆத்மி அலுவலகத்துக்கு வருகை தந்த அரவிந்த் கேஜரிவால் தொண்டர்களிடையே உரையாற்றினார்.

ஆம் ஆத்மி போராட்டம்: தில்லியில் 144 தடை!
தேர்தலுக்குப் பின் ஆம் ஆத்மி வங்கிக் கணக்குகள் முடக்கம்: அரவிந்த் கேஜரிவால்

ஆம் ஆத்மி கட்சித் தலைவர்களும், தொண்டர்களும் பாஜக தலைமை அலுவலகத்தை முற்றுகையிட தொடங்கியுள்ள நிலையில் ஏராளமான காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், ஆம் ஆத்மி போராட்டம் காரணமாக தில்லி பாஜக தலைமை அலுவலகப் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பட்டுள்ளது.

பாஜக தலைமை அலுவலகம் செல்லும் பாதை மூடப்பட்டுள்ளதாகவும், தில்லி ஐடிஓ நிலையம் மூடப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com