ஆபத்தான நிலையில் நாட்டுப்புற பாடகி..! மருத்துவர்களுடன் மோடி ஆலோசனை!

பத்ம பூஷண் விருதுபெற்ற நாட்டுப்புற பாடகி எய்ம்ஸ் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் இருப்பதாக அவரது மகன் தெரிவித்துள்ளார்.
நாட்டுப்புற பாடகி ஷார்தா சின்ஹா.
நாட்டுப்புற பாடகி ஷார்தா சின்ஹா. படம்: பிடிஐ.
Published on
Updated on
1 min read

பத்ம பூஷண் விருதுபெற்ற நாட்டுப்புற பாடகி எய்ம்ஸ் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் இருப்பதாக அவரது மகன் தெரிவித்துள்ளார்.

போஜ்புரி, மைதிலி, மஹாஹி மொழிகளில் நாட்டுப்புற பாடல்கள் பாடி பிரபலமானவர் பாடகி ஷார்தா சின்ஹா. பீகாரைச் சேர்ந்த இவருக்கு 2018இல் பத்ம பூஷண்விருது கிடைத்தது.

இசையில் பிஹெச்டி முடித்த இவர்,” கிளாசிக்கல் இசையை கற்றிருந்தாலும் எனக்கு நாட்டுப்புற பாடல்கள்தான் பிடித்திருக்கிறது” என விருது பெற்ற பின்னர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

அனுராக் காஷ்யப்பின் கேங்ஸ் ஆஃப் வஸிப்பூர் 2 படத்தில் இவர் பாடல் பாடியுள்ளார். 2017 முதல் மைலோமா எனும் புற்று நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்.

72 வயதாகும் ஷார்தா சின்ஹா ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு எய்ம்ஸ் மருத்துவமனையில் ஐசியு பிரிவில் கடந்த மாதம் அனுமதிக்கப்பட்டார்.

இவரது மகன் அனுஷ்மான் சிங் கூறியதாவது:

அம்மாவின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருக்கிறது. வெண்டிலேட்டரில் இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். சமூக ஊடகங்களில் இறந்துவிட்டதாக தவறான தகவல்கள் பரவி வருகின்றன. மருத்துவர்கள் அவர்களது முயற்சியை தொடர்கிறார்கள்.

இதிலிருந்து வெளிவாருவாரென நம்புகிறேன். இந்தக் கடினமான நேரத்தில் எங்களுடன் பிரார்த்தனை செய்யுங்கள் என்றார்.

எய்ம்ஸ் மருத்துவமனை, “பிரபல நாட்டுப்புற பாடகி ஷர்தா சின்ஹா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பிரதமர் மோடி மருத்துவர்களுடன் இது தொடர்பாக ஆலோசனை நடத்திவருகிறார். மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் வந்து பார்வையிட்டு சென்றார்” எனக் கூறப்பட்டது.

சமூக வலைதளங்களில் தவறான தகவலை பரப்பாதீர்கள் என அவரது குடும்பத்தினர் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com