திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

ஹேமந்த் சோரன் உதவியாளரிடம் வருமான வரி சோதனை!

ஹவாலா பணப் பரிவர்த்தனை நடப்பதாக எழுந்த புகாரையடுத்து, 17 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை

News image

கோப்புப் படம்

Updated On :9 நவம்பர் 2024, 1:10 pm IST

ஜார்க்கண்டில் முதல்வர் ஹேமந்த் சோரனின் உதவியாளர் தொடர்பான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

ஜார்க்கண்டில் நவம்பர் மாதத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், சனிக்கிழமையில் (நவ. 9) முதல்வர் ஹேமந்த் சோரனின் உதவியாளர் சுனில் ஸ்ரீவஸ்தவுக்கு தொடர்பான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

ராஞ்சி, ஜாம்ஷெட்பூர் உள்பட 17 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. தேர்தலில் ஹவாலா பணப் பரிவர்த்தனை நடப்பதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து, இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அக்டோபர் 26 ஆம் தேதியில் ராஞ்சி, ஜாம்ஷெட்பூர், கொல்கத்தாவில் 35 இடங்களில் மேற்கொள்ளப்பட்ட வருமான வரித்துறை சோதனையில், சுமார் ரூ. 150 கோடி மதிப்புள்ள பினாமி சொத்து, முதலீடு தொடர்பான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.