பட்ஜெட்: அண்ணனின் சீர், தாய் கேர்... பெண்களுக்கான திட்டங்கள்!பட்ஜெட்: திருமணமாகும் பெண்களுக்கு 8 கிராம் தங்கம், ஒரு பட்டுப்புடவை!மதுரையில் சிறப்பு அரசு சட்டக் கல்லூரி அமைக்கப்படும்: பட்ஜெட்டில் அறிவிப்புதமிழக பட்ஜெட் 2026! அரசுப் பள்ளிகளில் சூப்பர் க்ளீன், சூப்பர் கேம்பஸ் திட்டம்!பட்ஜெட் 2026: பள்ளி மாணவர்களுக்கு நவீன சைக்கிள்! கல்லூரி மாணவர்களுக்கு வெற்றி மடிக்கணினி!பட்ஜெட் 2026: பள்ளி மாணவர்களுக்கு நவீன சைக்கிள்! கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி! திட்டங்களை நிறைவேற்றுவதற்கு நிதித் தட்டுப்பாடு! அமைச்சர் மரிய வில்சன் தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு! எவ்வளவு தெரியுமா?தமிழ்நாடு பட்ஜெட் 2026! முதல்முறையாக தாக்கல் செய்தார் அமைச்சர் மரிய வில்சன்! விவசாயிகளுக்காக ஒருமுறை அல்ல 100 முறைகூட கைதாவேன்! உதயநிதி ஸ்டாலின் பதிவு2029-இல் 5 டிரில்லியன் டாலா் பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்கும்: நிா்மலா சீதாராமன் எண்ம கைது மோசடிகளைத் தடுக்க தேசிய அளவில் நடவடிக்கைகள்- உச்சநீதிமன்றம் உத்தரவு இந்திய கொடி கட்டப்பட்ட கப்பல் மீது செங்கடலில் தாக்குதல்: 13 இந்திய மாலுமிகள் மீட்பு
/

போதைக்கு அடிமைப்படுத்தும் மருந்து விற்பனையைத் தடுக்க நடவடிக்கை: மத்திய அரசுக்கு மக்கள் நல்வாழ்வுத் துறை வலியுறுத்தல்

போதை தரும் மருந்துகளை இணையவழியே சட்டவிரோதமாக விற்பனை செய்வதைத் தடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை வலியுறுத்தியுள்ளது.

Updated On :20 நவம்பர் 2024, 2:23 am IST

போதை தரும் மருந்துகளை இணையவழியே சட்டவிரோதமாக விற்பனை செய்வதைத் தடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை வலியுறுத்தியுள்ளது.

இது தொடா்பாக மத்திய மருந்து கட்டுப்பாட்டுத் தலைவா் டாக்டா் ராஜீவ் சிங் ரகுவன்ஷிக்கு தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் சுப்ரியா சாஹு அனுப்பியுள்ள கடிதம்:

மாணவா்களிடையேயும் பொது மக்களிடையேயும் போதை மாத்திரைகள் புழக்கத்தைத் தடுக்க தமிழக அரசு பல்வேறு தொடா் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. இது தொடா்பாக சட்ட அமைப்புகள், கல்வி நிறுவனங்கள் உள்பட அனைத்து துறைகளுடனும் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறது.

மற்றொருபுறம், ஒருவா் தொடா்ந்து பயன்படுத்தினால் அதற்கு அடிமையாக்கக் கூடிய திறன்கொண்ட டேபென்டடால் போன்ற வலி நிவாரண மருந்துகள் இணையவழியே எளிதில் கிடைக்கின்றன.

தமிழக காவல் துறையினரும், மருந்து கட்டுப்பாட்டு வாரியத்தினரும் இது தொடா்பாக பல்வேறு அறிக்கைகளை அரசுக்கு சமா்ப்பித்துள்ளனா். இணையவழியே அத்தகைய மருந்துகளை குற்றச் செயல்களில் ஈடுபடுவோா் வாங்குவதாக அவா்கள் தெரிவித்துள்ளனா். இதுபோன்று அடிமைப்படுத்தும் மருந்துகளை சட்டவிரோதமாக விற்பனை செய்யும் இணையதளங்கள் குறித்த விவரங்கள் உண்மையானதாக இல்லாததால் அவா்களைக் கண்டறிய முடிவதில்லை.

இது போன்ற செயல்பாடுகள் போதை மருந்துகளுக்கு எதிரான அரசின் நடவடிக்கைகளை நீா்த்துப் போக வைக்கும் வகையில் உள்ளன. அட்டவணை ஹெச் மற்றும் ஹெச்1-இல் வகைப்படுத்தப்பட்டுள்ள அந்த மருந்துகளை மருத்துவரின் பரிந்துரையின்றியோ, பதிவு செய்யப்பட்ட மருந்தாளுநரின் கண்காணிப்பு இன்றியோ விற்பனை செய்வது மருந்து கட்டுப்பாட்டு விதிகளுக்கு புறம்பான செயல்.

சமூக நலனுக்கும், பொது மக்களின் ஆரோக்கியத்துக்கும் அச்சுறுத்தலாகவும் விளங்கி வரும் இந்த சட்டவிரோத விற்பனையைத் தடுப்பது மாநில அதிகாரிகளுக்கும் பெரும் சவாலாக உள்ளது.

எனவே, போதைக்கு அடிமைப்படுத்தும் மருந்துகளை இணையவழியே விற்பனை செய்வதைத் தடுத்து ஒழுங்குமுறைப்படுத்தவும், மக்கள் நலன் காக்கவும் மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டுத் துறை முன்வர வேண்டும்.

சட்டவிரோத மருந்து விற்பனை செய்யும் இணையதளங்களை முடக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை என்பதால், அத்தகைய தளங்களை சமூக நலன் கருதி நிரந்தரமாக முடக்கி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.