புது தில்லி பிரகடனம் 2026: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஒருமனதாக ஏற்பு!மின் தேவையை சமாளிக்க கூடுதல் மின்சாரம் கொள்முதல்: தமிழக அரசு அறிவிப்பு!புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலின் அடுத்த இலக்கு ராகுல் காந்தி! - ஒடிசா நடிகர் பதிவால் சர்ச்சை

லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலின் அடுத்த இலக்கு ராகுல் காந்தி என ஒடிசா நடிகர் புத்ததித்யா மொகந்தி பதிவால் சர்ச்சை.

Lawrence Bishnoi | Rahul Gandhi

லாரன்ஸ் பிஷ்னோய் |ராகுல் காந்தி

Published On :

லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலின் அடுத்த இலக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி என ஒடிசா நடிகர் புத்ததித்யா மொகந்தி கூறியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், 'ஜெர்மனியிடம் கெஸ்டபோ(சிறப்பு காவல் படை) இருந்தது. இஸ்ரேலிடம் மொசாட்(புலனாய்வு அமைப்பு) உள்ளது. அமெரிக்காவில் சிஐஏ உள்ளது. இப்போது இந்தியாவில் லாரன்ஸ் பிஷ்னோய். அவர்க்ளின் பட்டியலில் அடுத்ததாக இருப்பது ஏஐஎம்ஐஎம் தலைவர் ஓவைஸி மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி' என்று குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் புத்ததித்யாவின் நீக்கம் செய்யப்பட்ட பதிவு.

நடிகர் புத்ததித்யாவின் நீக்கம் செய்யப்பட்ட பதிவு.

இதையடுத்து காங்கிரஸ் கட்சியின் இந்திய தேசிய மாணவர்கள் சங்கத் தலைவர் உதித் பிரதான், காவல்துறையில் ஒடிசா நடிகர் புத்ததித்யா மீது புகார் அளித்துள்ளார்.

தொடர்ந்து நடிகர் புத்ததித்யா தனது பதிவை நீக்கியத்துடன் மன்னிப்பும் கோரியுள்ளார்.

நடிகர் புத்ததித்யா

நடிகர் புத்ததித்யா

லாரன்ஸ் பிஷ்னோய்

மகாராஷ்டிர முன்னாள் அமைச்சரும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான பாபா சித்திக் கொலைக்கு முழு பொறுப்பேற்பதாக தாதா லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் அறிவித்தது.

லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் இதுபோன்று பல குற்றங்களில் ஈடுபட்டு வழக்குகள் உள்ளன.

தற்போது, தாங்கள் வணங்கும் குறிப்பிட்ட இன மான்களை வேட்டையாடியதற்காக, சல்மான் கானை கொலை செய்ய லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் முயற்சி செய்து வருகின்றனர்.

லாரன்ஸ் பிஷ்னோய் தற்போது பஞ்சாப் சபர்மதி மத்திய சிறையில் காவலில் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.