மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ் மேக்கேதாட்டு அணைக்கு எதிர்ப்பு! பேரவையில் முதல் தீர்மானத்தை முன்மொழிந்தார் முதல்வர் விஜய்!எனது அன்புச் சகோதரர்! ராகுலுக்கு முதல்வர் விஜய் பிறந்த நாள் வாழ்த்து! சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

சத்ரபதி சிவாஜி சிலை இடிந்த விவகாரம்: எதிர்க்கட்சிகள் பேரணி!

சத்ரபதி சிவாஜி சிலை இடிந்த விவகாரத்தில் ஆளும் கட்சியின் ஊழலைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் பேரணியில் ஈடுபட்டுள்ளனர்.

News image

பேரணியில் சரத் பவார், உத்தவ் தாக்கரே, நானா படோல் - பிடிஐ

Updated On :1 செப்டம்பர் 2024, 4:02 pm IST

சத்ரபதி சிவாஜி சிலை இடிந்த விவகாரத்தில் ஆளும் கட்சியின் ஊழலைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் பேரணியில் ஈடுபட்டுள்ளனர்.

மகா விகாஸ் அகாதி கூட்டணிக் கட்சியில் உள்ள தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், மகாராஷ்டிர காங்கிரஸ் தலைவர் நானா படோல், சிவசேனை தலைவர் உத்தவ் தாக்கரே ஆகியோர் தலைமையில் பேரணி நடைபெற்று வருகிறது.

தெற்கு மும்பையில் உள்ள ஹுதாத்மா சௌக்கில் இருந்து இந்தியாவின் நுழைவாயில் வரை மகா விகாஸ் அகாதி கூட்டணிக் கட்சி உறுப்பினர்கள் பேரணியாகச் செல்லத் திட்டமிட்டுள்ளனர்.

9 மாதங்களில் விழுந்த சிலை

மகாராஷ்டிரத்தின் சிந்துதுர்க்கில் உள்ள ராஜ்கோட் கோட்டையில் இருந்த 17 ஆம் நூற்றாண்டின் மராட்டிய சாம்ராஜ்யத்தின் மகாராஜா சத்ரபதி சிவாஜியின் சிலை கடந்த திங்கள்கிழமை பிற்பகல் (ஆக. 26) இடிந்து விழுந்தது. இந்த சம்பவம் மகாராஷ்டிரத்தில் பதற்றமான சூழ்நிலையை ஏற்படுத்தியது.

கடந்த ஆண்டு டிசம்பர் இறுதியில் பிரதமர் நரேந்திர மோடி சத்ரபதி சிவாஜி சிலையைத் திறந்துவைத்திருந்தார். சிலை திறந்து ஓராண்டு ஆவதற்குள் சிலை இடிந்து விழுந்தது.

9 மாதங்களில் சத்ரபதி சிவாஜி சிலை இடிந்து விழுந்ததற்கு பாஜக ஆட்சியின் ஊழலே காரணம் என காங்கிரஸ் உள்பட பல்வேறு எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.

மகாராஷ்டிரத்தில் தொடர் மழை பெய்து வருவதால் மழை மற்றும் பலத்த காற்றின் காரணமாக சிலை விழுந்ததாக பாஜக தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டது.

மேலும், சத்ரபதி சிவாஜி சிலை வெறும் சிலை மட்டுமல்ல, தங்களுக்கு தெய்வம் போன்றது என்றும், அந்த தெய்வத்திடம் (சத்ரபதி சிவாஜி ) மன்னிப்புக் கேட்டுக்கொள்வதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருந்தார்.

பேரணியையொட்டி இந்தியா கேட் அருகே கூடிய கூட்டம்

பேரணியையொட்டி இந்தியா கேட் அருகே கூடிய கூட்டம் - பிடிஐ

இந்நிலையில், சிவாஜி சிலை இடிந்து விழுந்த விவகாரத்தில் மாநில அரசைக் கண்டித்து மகா விகாஸ் அகாதி கூட்டணியைச் சேர்ந்த கட்சியினர் பேரணியில் ஈடுபட்டுள்ளனர்.

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் தலைவர் நானா படோம், சிவசேனை கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே ஆகியோர் தலைமையில் பேரணித் தொடங்கியது.

தெற்கு மும்பையில் உள்ள ஹுதாத்மா சௌக்கில் தொடங்கிய பேரணி, இந்தியாவின் நுழைவாயில் வரை நடைபெறவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.