மாநில உரிமையை இந்தியா கூட்டணி மீட்கும்: ஜம்மு - காஷ்மீரில் ராகுல் பேச்சு!

மாநில அந்தஸ்து கோரிக்கையை முழு பலத்துடன் தெருக்களில் இருந்து சட்டப்பேரவை முதல் நாடாளுமன்றம் வரை எழுப்புவோம்.
ஜம்மு - காஷ்மீர் மக்கள் மத்தியில் உரையாற்றும் ராகுல் காந்தி
ஜம்மு - காஷ்மீர் மக்கள் மத்தியில் உரையாற்றும் ராகுல் காந்தி படம்: எக்ஸ்
Published on
Updated on
1 min read

ஜம்மு - காஷ்மீருக்கு இந்தியா கூட்டணி மாநில உரிமையை பெற்றுத்தரும் என மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், கங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி இன்று (செப். 4) தெரிவித்தார்.

செப்டம்பர் 18 ஆம் தேதி ஜம்மு - காஷ்மீரில் சட்டப்பேரவைத் தேர்தல் தொடங்குகிறது. செப்டம்பர் 25 இரண்டாம் கட்டமும், அக்டோபர் 8 - மூன்றாம் கட்டமாகவும் தேர்தல் நடைபெறவுள்லது.

இந்தத் தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் தேசிய மாநாட்டுக் கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி வைத்து போட்டியிடுகிறது.

3 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், முதல் கட்ட வாக்குப்பதிவுக்கு சில நாள்களே உள்ளதால், ஜம்மு - காஷ்மீரில் தேர்தல் பிரசாரத்தை இன்று (செப். 4) ராகுல் காந்தி தொடக்கி வைத்தார்.

ரம்பன் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட தேர்தல் பிரசாரத்தில் பேசியதைத் தொடர்ந்து, பின்னர் அனந்தநாக் பகுதியில் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்றார்.

ஜம்மு - காஷ்மீரை பயன்படுத்திக்கொள்கிறது பாஜக

தேர்தல் பிரசாரத்தின்போது ராகுல் காந்தி பேசியதாவது, ''இந்திய வரலாற்றில் முதன்முறையாக ஒரு மாநிலத்தின் அந்தஸ்து பறிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீரில் இந்தியா கூட்டணியின் அரசு அடுத்த மாதம் ஆட்சி அமைக்கவுள்ளது. மாநில அந்தஸ்து கோரிக்கையை முழு பலத்துடன் தெருக்களில் இருந்து சட்டப்பேரவை முதல் நாடாளுமன்றம் வரை எழுப்புவோம்.

நான் உத்தரவாதத்துடன் சொல்கிறேன், பாஜக என்ன செய்தாலும் இந்தியா கூட்டணி உங்களுக்கு மாநில உரிமையை பெற்றுத்தரும். மாநில உரிமையப் பெறும் வரை இந்தியா கூட்டணி மத்திய அரசுக்கு போதிய அழுத்தம் கொடுக்கும்.

ஜம்மு-காஷ்மீர் துணை நிலை ஆளுநர் என்ற பெயரில் மன்னராட்சி நடத்தப்படுகிறது. இங்குள்ள செல்வம், வளங்கள் மற்றும் வேலை வாய்ப்புகள் காஷ்மீரிகளுக்கு வழங்கப்படுவதில்லை, வெளியில் இருப்பவர்களுக்கு ஒப்பந்தங்கள் வாரி இறைக்கப்படுகின்றன. இதை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்

எனது காஷ்மீர் பண்டிட் சகோதரர்களுக்கு நான் சொல்ல விரும்புவது, பா.ஜ.க. உங்களை சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறதே தவிர, உங்களுக்கு உதவவில்லை.

நாங்கள் உங்களுடன் நிற்கிறோம், எங்கள் அரசாங்கம் வந்தால், நாங்கள் உங்களுடன் முன்னேறுவோம்'' என ராகுல் காந்தி பேசினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com