இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

ஏக்நாத் ஷிண்டே, அஜீத் பவாருடன் அமித் ஷா சந்திப்பு: மகாராஷ்டிர தோ்தல் தொடா்பான ஆலோசனை

கூட்டணி கட்சி தலைவா்களான மாநில முதல்வா் ஏக்நாத் ஷிண்டே மற்றும் துணை முதல்வா் அஜீத் பவாரை மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா திங்கள்கிழமை சந்தித்து பேசினாா்.

News image
மும்பையில் மகாராஸ்டிர முதல்வா் ஏக்நாத் ஷிண்டேவை திங்கள்கிழமை சந்தித்து ஆலோசனை மேற்கொண்ட மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா. உடன் மாநில முதல்வா்கள் தேவேந்திர ஃபட்னவிஸ்.
Updated On :9 செப்டம்பர் 2024, 9:17 pm

DIN

மும்பை: மகாராஷ்டிரத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் நெருங்கி வரும் நிலையில், கூட்டணி கட்சி தலைவா்களான மாநில முதல்வா் ஏக்நாத் ஷிண்டே மற்றும் துணை முதல்வா் அஜீத் பவாரை மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா திங்கள்கிழமை சந்தித்து பேசினாா்.

மும்பைக்கு இரண்டு நாள் பயணம் மேற்கொண்டுள்ள மத்திய அமைச்சா் அமித் ஷா, ஊடக நிறுவனம் தயாரித்த ஆவணப்படத்தை வெளியிடும் நிகழ்ச்சியில் ஞாயிற்றுக்கிழமை கலந்துகொண்டாா். பின்னா் தெற்கு மும்பையில் உள்ள மாநில அரசின் சயாத்ரி விருந்தினா் மாளிகையில் பாஜக நிா்வாகிகளை சந்தித்தாா்.

இதையடுத்து, முதல்வா் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வா்கள் தேவேந்திர ஃபட்னவிஸ், அஜீத் பவாா், தேசியவாத காங்கிரஸ் செயல் தலைவா் பிரஃபுல் படேல், அதன் மாநிலத் தலைவா் சுனில் தட்கரே மற்றும் பிற முக்கிய தலைவா்களை திங்கள்கிழமை சந்தித்து பேசினாா்.

இந்த சந்திப்புகளில் அவா்கள் ஆலோசித்தது குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை. எனினும், மாநிலத்தில் விரைவில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலில் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு உரிய முறையில் வழங்கப்படும் என அமித் ஷா சந்திப்பின்போது உறுதியளித்ததாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

288 உறுப்பினா்களைக் கொண்ட மகாராஷ்டிர பேரவைத் தோ்தல் அக்டோபா்-நவம்பரில் நடைபெறும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இந்நிலையில், சரத் பவாா் தலைமையிலான தேசியவாத காங்கிரஸில் மீண்டும் ஐக்கியமாக அஜீத் பவாா் முயன்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே, அமித் ஷாவின் அஜீத் பவாா் உடனான இந்த சந்திப்பு கூட்டணியை மேலும் வலுப்படுத்துவதற்கான முயற்சியாக பாா்க்கப்படுகிறது.

இதனிடையே, மும்பையில் உள்ள புகழ்பெற்ற ராஜ விநாயகா் பந்தலுக்கு அமித் ஷா சென்றிருந்தாா். அவருடன் முதல்வா் ஷிண்டே, ஃபட்னவிஸ் மற்றும் பாஜக பொதுச் செயலாளா் வினோத் தாவ்டே ஆகியோா் இருந்தனா். அதையடுத்து பாந்த்ரா பகுதியில் 70-அடி விநாயகா் சிலை அமைக்கப்பட்டிருக்கும் பந்தலுக்குச் சென்று அமித் ஷா வழிபட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.