காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஜார்க்கண்டில் பாரத் ஜோடா யாத்திரையின்போது நாய்க்கு பிஸ்கட் அளித்த விடியோ வைரலானது.
அந்த விடியோவில் காங்கிரஸ் உறுப்பினர் ஒருவருக்கு ராகுல் பிஸ்கட் கொடுப்பது போலான காட்சியைக் குறிப்பிட்டு பாஜக, ராகுல் காந்தி தனது கட்சிப் பணியாளர்களை இவ்வாறுதான் நடத்துகிறார் என விமர்சித்தது.
அதற்கு பதிலளிக்கும்விதமாக கும்லா மாவட்டத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ராகுல் விளக்கமளித்துள்ளார். அவர் பேசியது:
“செல்லப் பிராணி நடுங்கி கொண்டிருந்தது. நான் பிஸ்கட் கொடுத்தபோது அது பயப்பட்டிருக்க வேண்டும். அதனால் நாயின் உரிமையாளருக்கு பிஸ்கட் கொடுத்து கொடுக்கச் சொன்னேன். அதன் பிறகு நாய் பிஸ்கட்டைச் சாப்பிட்டது. இதில் என்ன பிரச்னை. பாஜகவுக்கு நாய்கள் மீது அப்படி என்ன பிரியம் எனத் தெரியவில்லை” எனப் பேசினார்.
அஸ்ஸாம் முதல்வர் ஹிமாந்த பிஸ்வா சர்மா, “நான் அஸாமியராகவும் இந்தியராகவும் பெருமைப்படுகிறேன். பிஸ்கட்டை சாப்பிட மறுத்து காங்கிரஸில் இருந்து நான் வெளியேறிவிட்டேன்” என ராகுல் காந்தியைத் தாக்கியுள்ளார்.
நாயின் உரிமையாளர் பிஸ்கட்டை ராகுல் காந்தி நாய்க்கு கொடுக்குமாறு சொல்லி அளித்ததாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், அவர் காங்கிரஸ் பணியாளர் அல்ல என்பதையும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
சித்தராமையா ராஜிநாமா செய்ய காங்கிரஸ் மேலிடம் அழுத்தம்?

விடைத்தாள் மதிப்பீடு இணையதளப் பக்கம் ஹேக் செய்யப்படவில்லை: சிபிஎஸ்இ

பேயர் கிராப்சயின்ஸ் Q4 நிகர லாபம் 13% உயர்வு!
சுயநலத்திற்காக பதவியை ராஜிநாமா செய்யும் அரசியலை மக்கள் நிராகரிப்பார்கள் : சிபிஐ
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



