
பாட்னா: ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதீஷ் குமார் எங்களுடன் கைகோர்த்தால் பிகாரில் உள்ள 40 தொகுதிகளிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றிபெறும் என்று பாஜக எம்எல்ஏ ஞானேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே, பிகாரில், நிதீஷ் குமார் ராஷ்ட்ரிய ஜனதா தளத்துடனான கூட்டணியை முறித்துக் கொண்டு பாஜகவுடன் சேர்ந்து மாநிலத்தில் ஆட்சியமைக்க வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வேகமாகப் பரவி வரும் நிலையில், பாஜக எம்எல்ஏவின் இந்தப் பேச்சு அதனை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
இதையும் படிக்க.. அம்மாவின் வாசனை.. வெளிவராத பவதாரணியின் பாடலை வெளியிட்ட கனிமொழி
மேலும், பிரதமர் நரேந்திர மோடிக்கு நிதீஷ் குமாரை மிகவும் பிடிக்கும். எதுவாக இருந்தாலும் இன்னும் இரண்டு நாள்களில் தெரிந்துவிடும் என்றும் அவர் சூசகமாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், மாற்றம் நிச்சயம், அதற்கு மிகவும் குறுகிய காலமே உள்ளது. நேற்று பாஜக இது தொடர்பாக முடிவெடுத்துவிட்டது. நிதீஷ் குமார் ஏற்கனவே தயாராகத்தான் உள்ளார். பிரதமர் நரேந்திர மோடிக்கும் நிதீஷ் குமாரை மிகவும் பிடிக்கும். பாஜகவுடன் நிதீஷ் குமார் கைகோர்த்தால் 40 தொகுதிகளிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணியே வெல்லும். எதுவாக இருந்தாலும் இன்னும் இரண்டு நாள்களில் முடிவாகிவிடும். பிகாரிலும் விரைவில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அமையவிருக்கிறது என்று ஏஎன்ஐக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.