பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

தாய்லாந்து அரசர் மற்றும் அரசியுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

தாய்லாந்து அரசரை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துள்ளதைப் பற்றி...

தாய்லாந்து சென்றுள்ள இந்தியப் பிரதமர் மோடி அந்நாட்டு அரசர் மற்றும் அரசியை நேரில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

Published On :

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தாய்லாந்து அரசர் மற்றும் அரசியை நேரில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

அரசு முறைப் பயணமாக தாய்லாந்து சென்றுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டு அரசர் மஹா வஜ்ரலோங்கோர்ன் மற்றும் அரசி சுதீதா பஜ்ரசுதாபிமலக்‌ஷனாவை இன்று (ஏப்.4) நேரில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

தலைநகர் பாங்காகிலுள்ள துஸித் அரண்மனையில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் இரு நாட்டு தலைவர்களும் தாய்லாந்து இந்தியா இடையிலான உறவுகளை மேம்படுத்துவது குறித்து கலந்துரையாடியதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தாய்லாந்து மற்றும் இந்தியா இடையிலான கலாச்சார பாரம்பரியம் குறித்து அவர்கள் தங்களது நிலைப்பாடுகளை பகிர்ந்து கொண்டதாகக் கூறப்பட்டுள்ளது.

மேலும், இந்தச் சந்திப்பில் கடந்த 2024-ல் இந்தியாவிலிருந்து தாய்லாந்து நாட்டுக்கு கொண்டு செல்லப்பட்ட புத்தரின் நினைவுச் சின்னங்களினால் வலுவடைந்துள்ள உறவுகளைப் பற்றி அவர்கள் பேசியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, தாய்லாந்து நாட்டில் தனது அரசு முறைப் பயணத்தை முடித்துக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி அங்கிருந்து இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.