பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

மணிப்பூரில் அதிகரிக்கும் ரேபிஸ் பாதிப்பு! கட்டுப்பாடுகள் விதிப்பு!

மணிப்பூர் கிராமத்தில் ரேபிஸ் நோய் பரவுவதினால் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதைப் பற்றி...

கோப்புப் படம்

Published On :

மணிப்பூரின் சூரசந்திரப்பூர் மாவட்டத்திலுள்ள ஓரு கிராமத்தில் அதிகரித்து வரும் ரேபிஸ் நோய் பாதிப்பினால் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

சூராசந்திரப்பூர் மாவட்டத்தின் நியூ ஸோவெங் கிராமத்தில் ரேபிஸ் நோய் தொற்றானது தொடர்ந்து அதிகரித்து வருவதினால் அங்குள்ள மக்களும் விலங்குகளும் கடுமையான பாதிப்புக்குள்ளானதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்த நோயைத் தடுக்க அந்தக் கிராமம், கட்டுப்பாடுள்ள மண்டலமாக அறிவிக்கப்பட்டு, நாய்கள் உள்ளிட்ட வளர்ப்புப் பிராணிகளின் விற்பனை மற்றும் அவற்றை கிராமத்தை விட்டு வெளியே கொண்டுச் செல்வதற்கும் உள்ளே கொண்டு வருவதற்கும் முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, மாவட்ட குற்றவியல் நீதிபதியின் உத்தரவின்படி அந்த கிராமத்திலுள்ள அனைத்து தெரு நாய்கள் மற்றும் வளர்ப்பு நாய்கள் அடையாளம் காணப்பட்டு தடுப்பூசி செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, நியூ ஸோவெங் கிராமத்தில் ஒவ்வொரு வீடாகச் சென்று மேற்கொள்ளப்படும் மருத்துவப் பரிசோதனைகள் உள்ளிட்ட கண்காணிப்புகளை அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளனர். மேலும், இந்தக் கட்டுப்பாடுகளை மீறும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.