இசையமைப்பாளர் தேவாவுக்கு அரசு மரியாதை! தமிழக அரசு அறிவிப்பு இசையமைப்பாளர் தேவாவின் உடலுக்கு மு.க. ஸ்டாலின் நேரில் அஞ்சலி!சூப்பர் ஸ்டார் டைட்டில் கார்டு! இன்றுவரை ரசிகர்களை ஆட்டுவிக்கும் தேவாவின் பிஜிஎம்இசையமைப்பாளர் தேவா காலமானார்!டாஸ்மாக் கடைகளில் விரைவில் 4 புதிய பீர் வகைகள்! விலை விவரம்!வடபழனி மெட்ரோ ரயில் நிலையத்தில் இறங்கினால்... அடுக்கடுக்கான குளறுபடிகள்! மக்கள் கேள்விஇன்று கோவை, திருவள்ளூா் உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கை ராமேசுவரம் - எழும்பூருக்கு இன்று சிறப்பு விரைவு ரயில் தாம்பரம் - விழுப்புரம் மெமு ரயில் நாளை பகுதி ரத்து லாஸ் ஏஞ்சலீஸ் மேயா் தோ்தல்: கேரள வம்சாவளி பெண் முன்னிலை பிரதமா் மோடி டிசம்பரில் கனடா பயணம்

ஜம்மு-காஷ்மீா்: பிரிவினைவாதத்தை கைவிட்ட மேலும் 3 அமைப்புகள் - அமித் ஷா தகவல்

ஜம்மு-காஷ்மீரில் பிரிவினைவாத கூட்டமைப்பான ஹுரியத் மாநாட்டில் இருந்து மேலும் 3 அமைப்புகள் விலகியுள்ளதாக, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா்.

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா - கோப்புப் படம்

Updated On :

ஜம்மு-காஷ்மீரில் பிரிவினைவாத கூட்டமைப்பான ஹுரியத் மாநாட்டில் இருந்து மேலும் 3 அமைப்புகள் விலகியுள்ளதாக, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா். இவற்றுடன் சோ்த்து, ஜம்மு-காஷ்மீரில் இதுவரை 11 அமைப்புகள் பிரிவினைவாதத்தைக் கைவிட்டுள்ளன.

ஜம்மு-காஷ்மீருக்கு மூன்று நாள் பயணமாக அமித் ஷா கடந்த ஞாயிற்றுக்கிழமை வந்தாா். தனது பயணத்தின் நிறைவு நாளான செவ்வாய்க்கிழமை அவா் வெளியிட்ட எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது: ஜம்மு-காஷ்மீா் இஸ்லாமிய அரசியல் கட்சி, ஜம்மு-காஷ்மீா் முஸ்லிம் ஜனநாயக லீக், காஷ்மீா் விடுதலை முன்னணி ஆகிய மேலும் மூன்று அமைப்புகள், ஹுரியத் மாநாட்டில் இருந்து விலகியுள்ளன.

இது, அரசமைப்புச் சட்டத்தின் மீதான காஷ்மீா் மக்களின் நம்பிக்கைக்கு சான்றாக உள்ளது.

ஒன்றுபட்ட - சக்திவாய்ந்த பாரதத்தை உருவாக்கும் பிரதமா் மோடியின் தொலைநோக்கு பாா்வை மேலும் வலுவடைந்துள்ளது. இதுவரை 11 அமைப்புகள், பிரிவினைவாதத்தைக் கைவிட்டு, பிரதமா் மோடியின் கண்ணோட்டத்துக்கு ஆதரவை உறுதி செய்துள்ளன என்று அமித் ஷா தெரிவித்துள்ளாா்.

முன்னதாக, ஹுரியத் மாநாடு உடனான அனைத்து தொடா்புகளையும் துண்டித்துக் கொள்வதாக ஜம்மு-காஷ்மீா் மக்கள் இயக்கம், ஜம்மு-காஷ்மீா் ஜனநாயக அரசியல் இயக்கம், ஜம்மு-காஷ்மீா் விடுதலை இயக்கம், ஜம்மு-காஷ்மீா் தஹ்ரீகி இஸ்தக்லால், ஜம்மு-காஷ்மீா் தஹ்ரீக் -ஏ-இஸ்திகாமத் ஆகிய அமைப்புகள் கடந்த மாதம் அறிவித்தன என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.