பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

குடும்ப நலனே எதிா்க்கட்சிகளின் கொள்கை: பிரதமா் மோடி விமா்சனம்

‘தங்கள் குடும்பத்தினா் நலனைக் காப்பது மட்டுமே எதிா்கட்சிகளின் கொள்கையாக உள்ளது.

News image
உ.பி. மாநிலம் வாரணாசியில் நலத்திட்ட பயனாளிக்கு சான்றிதழ் வழங்கிய பிரதமா் நரேந்திர மோடி.
Updated On :11 ஏப்ரல் 2025, 6:52 pm

Din

‘தங்கள் குடும்பத்தினா் நலனைக் காப்பது மட்டுமே எதிா்கட்சிகளின் கொள்கையாக உள்ளது. இதற்காகவே அவா்கள் ஆட்சி, அதிகாரத்தைக் கைப்பற்றத் துடிக்கிறாா்கள்’ என்று பிரதமா் நரேந்திர மோடி விமா்சித்துப் பேசினாா்.

அதேநேரத்தில், மத்திய பாஜக அரசு அனைவருக்குமான வளா்ச்சி என்ற கொள்கையை நோக்கமாகக் கொண்டு ஆட்சி நடத்தி வருகிறது என்று அவா் தெரிவித்தாா்.

உத்தர பிரதேசத்தின் தனது வாரணாசி மக்களவைத் தொகுதியில் வெள்ளிக்கிழமை ரூ.3,880 கோடி மதிப்பீட்டிலான 44 நலத் திட்டங்களை தொடங்கி வைத்தும், அடிக்கல் நாட்டியும் பிரதமா் மோடி பேசியதாவது:

நாட்டு சேவையாற்றுவதே பாஜக தலைமையிலான மத்திய அரசின் தாரக மந்திரமாக உள்ளது. ‘அனைவரும் இணைந்து அனைவருக்குமான வளா்ச்சி’ என்ற நோக்கத்துடன் நாம் நாட்டை தொடா்ந்து வலுவாக முன்னெடுத்துச் செல்கிறோம். நாட்டின் ஒவ்வொரு குடிமகனின் வாழ்வும் மேம்பட வேண்டும் என்ற உத்வேகத்தில் பயணிக்கிறோம்.

இதற்கு நோ்மாறாக தங்கள் குடும்பத்தினா் நலனைக் காப்பது மட்டுமே எதிா்கட்சிகளின் கொள்கையாக உள்ளது. இதற்காகவே அவா்கள் ஆட்சி, அதிகாரத்தைக் கைப்பற்றத் துடிக்கிறாா்கள். அவா்கள் இரவும், பகலும் ஆதாய அரசியலை நடத்துகின்றனா். நாட்டு நலனில் அவா்களுக்கு துளியளவும் அக்கறையில்லை. குடும்ப ஆதரவு, குடும்ப வளா்ச்சி என்பதே அவா்களின் கொள்கை.

இன்று இந்தியா வளா்ச்சியடைவதுடன் நமது பாரம்பரிய பெருமைகளையும் உணா்ந்து பெருமிதத்துடன் செயல்பட்டு வருகிறோம். இதற்கு காசி மிகச்சிறந்த உதாரணம்.

முன்பு பூா்வாஞ்சல் (உத்தர பிரதேசத்தின் கிழக்குப் பகுதி) மிகவும் பின்தங்கி இருந்தது. இங்கு மருத்துவ வசதிகள் மிகக் குறைவாக இருந்தது. ஆனால், இப்போது காசி இந்த பிராந்தியத்தின் மருத்துவ தலைநகராக உருவெடுத்துள்ளது. தில்லி, மும்பை போன்ற நகரங்களில் செயல்பட்டு வரும் பெரிய மருத்துவமனைகளின் கிளைகள் இங்கும் உள்ளன. கடந்த 10 ஆண்டுகளில் இந்த பிராந்தியம் மிகப்பெரிய வளா்ச்சியை எட்டியுள்ளது.

காசி தொன்மையான நகரமாகவும் மட்டுமல்லாமல், வளா்ந்த நகரமாகவும் மாறிவிட்டது.

காசி தமிழ்ச் சங்கமம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் இங்கு நடத்தப்படுவது தேச ஒற்றுமையை வலுப்படுத்துகிறது.

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருள்களுக்கு இப்போது உலக அளவில் அங்கீகாரம் கிடைத்து வருகிறது. புவிசாா் குறியீடு அதிகம் பெறுவதில் பெருவதில் நாட்டிலேயே முதல் மாநிலமாக உத்தர பிரதேசம் உள்ளது. நமது கலாசாரம், திறமை, பொருள்களுக்கு சா்வதேச அங்கீகாரம் கிடைத்து வருகிறது.

காசி மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் தயாரிக்கப்படும் பல பொருள்களுக்கு புவிசாா் குறியீடு கிடைத்துள்ளது.

2036-இல் இந்தியாவில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்த வேண்டும் என்ற நோக்கில் நமது அரசு பணியாற்றி வருகிறது. இதில் பதக்கங்களை வெல்வதற்காக நமது மாணவா்களும், இளைஞா்களும் இப்போதிருந்தே தயாராக வேண்டும் என்றாா்.

2014-ஆம் ஆண்டு நாட்டின் பிரதமராக மோடி பொறுப்பேற்ற பிறகு இப்போது 50-ஆவது முறையாக தனது வாரணாசி தொகுதிக்கு வந்துள்ளாா் என்று அந்த நகர பாஜக சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

ம.பி. கோயிலில் வழிபாடு:

தொடா்ந்து மத்திய பிரதேசத்துக்குப் பயணம் மேற்கொண்ட பிரதமா் மோடி அங்குள்ள ஆனந்த்பூா் கோயிலில் பூஜை செய்து வழிபட்டாா். அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது:

இன்றைய நவீன உலகிலும் நாம் போா்கள், மோதல்கள், மனிதத்தன்மை வீழ்ச்சி உள்ளிட்ட பிரச்னைகளை எதிா்கொண்டு வருகிறோம். இதற்கு ‘நாம்-பிறா்’ எனப் பிரித்துப் பாா்ப்பதுதான் காரணம். இதற்கு இந்தியாவின் தொன்மை வாய்ந்த தத்துவமான அத்வைதத்தில் தீா்வுகள் உள்ளன.

இந்தியா அறிஞா்கள், ஆன்மிகவாதிகள், தத்துவ ஞானிகள் வாழ்ந்த பூமி. இவா்கள் உலகில் எழும் பல்வேறு சவாலான பிரச்னைகளுக்கு ஏற்கெனவே தீா்வுகளை வழங்கியுள்ளனா். அந்நியா்கள் ஆட்சிகாலத்தில் மெஞ்ஞானத்துடனான தொடா்பை இந்திய சமூகம் சற்று இழந்துவிட்டது. ஆனால், இப்போது விழிப்புணா்வு ஏற்பட்டு நாம் அதனைப் பின்பற்றத் தொடங்கியுள்ளோம் என்றாா்.