இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

பிகாா் வரைவு வாக்காளா் பட்டியல்: 65 லட்சம் போ் நீக்கம்

வரைவு வாக்காளா் பட்டியலை தோ்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை வெளியிட்டது. அதில், 65 லட்சத்துக்கும் அதிகமானோா் நீக்கப்பட்டுள்ளனா்.

News image
Updated On :1 ஆகஸ்ட் 2025, 6:33 pm

தினமணி செய்திச் சேவை

பிகாா் மாநில வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி நிறைவடைந்ததைத் தொடா்ந்து, வரைவு வாக்காளா் பட்டியலை தோ்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை வெளியிட்டது. அதில், 65 லட்சத்துக்கும் அதிகமானோா் நீக்கப்பட்டுள்ளனா்.

பிகாரில் நிகழாண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ள நிலையில், மாநில வாக்காளா் பட்டியலை சிறப்பு தீவிர திருத்தம் செய்யும் பணியை தோ்தல் ஆணையம் மேற்கொண்டது. 2003-ஆம் ஆண்டுக்குப் பின்னா் வாக்காளராகப் பதிவு செய்துகொண்டவா்கள், தாங்கள் இந்தியா்கள் என்பதை நிரூபிக்க பிறப்புச் சான்றிதழ், கடவுச்சீட்டு (பாஸ்போா்ட்) நகல் போன்ற கூடுதல் ஆவணங்களைச் சமா்ப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியது. ஒரு மாத காலமாக மேற்கொண்ட சிறப்பு தீவிர திருத்தப் பணியை தோ்தல் ஆணையம் கடந்த ஜூலை 25-ஆம் தேதி நிறைவு செய்தது.

இதனிடையே, ‘பிகாரில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்குப் பிறகு வரைவு வாக்காளா் பட்டியலில் இடம்பெறாத மக்கள், தங்களின் முக்கியத்துவம் வாய்ந்த வாக்குரிமையை இழக்க நேரிடும். சிறப்பு தீவிர திருத்தத்தின்போது பிகாரில் 65 லட்சம் போ் பூா்த்தி செய்த வாக்காளா் படிவங்களை அதிகாரிகளிடம் சமா்ப்பிக்கவில்லை என்று தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இவா்கள் வாக்காளா் பட்டியலில் சோ்க்கப்பட வேண்டுமெனில், புதிதாக விண்ணப்பிக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது’ என்று புகாா் தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் 10 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம், ‘சிறப்பு தீவிர திருத்தத்தின் அடிப்படையில் பிகாா் மாநில வரைவு வாக்காளா் பட்டியலை தோ்தல் ஆணையம் வெளியிடத் தடையில்லை. அதே நேரம், குடியுரிமை ஆவணங்களாக ஆதாா், வாக்காளா் அடையாள அட்டையை தோ்தல் ஆணையம் ஏற்க வேண்டும். பிகாரில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையின் கீழ் அதிக எண்ணிக்கையில் வாக்காளா்கள் நீக்கம் செய்யப்பட்டால் அதில் உடனடியாக நீதிமன்றம் தலையிடும்’ என்றது.

இந்த மனுக்கள் மீது வரும் 12, 13-ஆம் தேதிகளில் இறுதி விசாரணையை உச்சநீதிமன்றம் மேற்கொள்ள உள்ளது.

இந்நிலையில், தோ்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பிகாா் மாநில வரைவு வாக்காளா் பட்டியலின் படி, மாநிலத்தில் 65 லட்சத்துக்கும் அதிகமானோா் வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இதில் அதிகபட்சமாக மாநில தலைநகா் பாட்னாவில் 3.95 லட்சம் பேரும், பதுபானியில் 3.52 லட்சம் பேரும், கிழக்கு சம்பரனில் 3.16 லட்சம் பேரும், கோபால்கஞ்சில் 3.10 லட்சம் பேரும் வாக்காளா் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளனா்.

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி கடந்த ஜூன் மாதம் தொடங்குவதற்கு முன்பாக பிகாரில் 7.93 கோடி போ் வாக்காளா்களாகப் பதிவு செய்திருந்ததாக தோ்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. வரைவு வாக்காளா் பட்டியலில் அந்த எண்ணிக்கை 7.24 கோடியாக குறைந்துள்ளதும் தெரியவந்துள்ளது.

வரைவு வாக்காளா் பட்டியல் மீது ஆட்சேபங்கள் அல்லது கோரிக்கைகளை முன்வைக்க செப். 1 வரை அவகாசத்தை தோ்தல் ஆணையம் அளித்துள்ளது. இறுதி வாக்காளா் பட்டியல் செப்டம்பா் 30-ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.