
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுவது குறித்து இந்திய வெளியுறவு அமைச்சகம் கருத்து தெரிவித்துள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் போர் உள்பட இஸ்ரேல் - ஈரான் போர், தாய்லாந்து - கம்போடியா போர், எகிப்து - எத்தியோப்பியா போர், செர்பியா - கொசோவோ போர், காங்கோ ஜனநாயகக் குடியரசு - ருவாண்டா இடையேயான போரையும் நிறுத்தியதாக டொனால்ட் டிரம்ப் தம்பட்டம் அடித்து வருகிறார். ஆனால், உண்மைத்தன்மை இருக்கிறதா என்பதுதான் புரியாத புதிராக இருந்து வருகிறது.
இதனிடையே, போர்களை நிறுத்தி வரும் தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கையையும் அளித்து வந்தார். அவரின் கோரிக்கையை ஆதரிக்கும் வெள்ளை மாளிகை, டிரம்ப் பதவியேற்ற ஆறுமாத காலத்தில் மாதம் ஒருமுறை போரை நிறுத்துவதாகக் கூறி, நோபல் பரிசுக்கு பரிந்துரைத்ததுபோல் தெரிகிறது.
இந்த நிலையில், டிரம்ப்புக்கு நோபல் பரிசு வழங்கப்படலாமா? என்று இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளரான ரந்தீர் ஜெய்ஸ்வாலிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
ஆனால், அதற்கு பதிலளித்த ரந்தீர், அந்தக் கேள்வியை வெள்ளை மாளிகையிடமே கேளுங்கள் என்று கூறிவிட்டார்.
இதன்பொருள், டிரம்ப்புக்கு நோபல் பரிசு வழங்குவது குறித்த விவகாரத்தில் இந்தியா தலையிட விரும்பவில்லை என்பதுதான்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.