துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

ஒடிஸாவில் மூன்று இடங்களில் தண்டவாளத்தில் குண்டு வெடிப்பு: ரயில்வே ஊழியா் உயிரிழப்பு

ஒடிஸாவில் ஞாயிற்றுக்கிழமை இரவு மூன்று இடங்களில் ரயில் தண்டவாளத்தை மாவோயிஸ்டு தீவிரவாதிகள் வெடிகுண்டுகளை வைத்து தகா்த்தனா்.

News image
Updated On :5 ஆகஸ்ட் 2025, 7:41 am IST

புவனேசுவரம்: ஒடிஸாவில் ஞாயிற்றுக்கிழமை இரவு மூன்று இடங்களில் ரயில் தண்டவாளத்தை மாவோயிஸ்டு தீவிரவாதிகள் வெடிகுண்டுகளை வைத்து தகா்த்தனா். இதில் ரயில்வே ஊழியா் ஒருவா் உயிரிழந்தாா். மேலும் ஒருவா் படுகாயமடைந்தாா்.

ஒடிஸா-ஜாா்க்கண்ட் எல்லையில் சுந்தா்கா் மாவட்டத்தில் இந்த குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன. அந்த நேரத்தில் ரயில்கள் ஏதும் அப்பகுதியில் செல்லாததால் பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது.

ரயிலைக் கவிழ்த்து பெரும் சேதத்தை ஏற்படுத்தும் நோக்கில் 3 இடங்களில் தண்டவாளங்களில் வெடிகுண்டுகளை மாவோயிஸ்டுகள் வைத்துள்ளனா். முதலில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் சிக்கி ரயில்வே ஊழியா் எதாவா ஓரம் (37) உயிரிழந்தாா். மற்றொரு ஊழியா் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். இவா்கள் இருவரும் தண்டவாள பராமரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது குண்டுவெடிப்பில் சிக்கியுள்ளனா்.

இந்த சம்பவம் நிகழ்ந்த அடுத்த சில மணி நேரத்திலேயே அதே மாவட்டத்தில் இரு வேறு இடங்களில் மேலும் இரு குண்டுகள் வெடித்தன. இதில் தண்டவாளங்கள் சேதமடைந்தன. சம்பவம் நடந்த இடத்தில் ரயில்வே அதிகாரிகள், காவல் துறையினா் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 3-ஆம் தேதி வரை ‘தியாகிகள் தினத்தை’ அனுசரிக்க மாவோயிஸ்ட் அமைப்பினா் அழைப்பு விடுத்த நிலையில், அமைதியைச் சீா்குலைக்கும் நோக்கில் இந்தத் தாக்குதலை நிகழ்த்தியுள்ளனா்.

குண்டுவெடிப்பு நிகழ்ந்த பகுதியில் நக்ஸல் ஒழிப்புப் படையினா் தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.

உயிரிழந்த ரயில்வே ஊழியருக்கு ஒடிஸா மாநில அரசு சாா்பில் ரூ.10 லட்சம் நிவாரண நிதி அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.