இந்தியா
காசி தமிழ் சங்கமம் தொடக்கம்: பிரதமா் மோடி வாழ்த்து
4-ஆம் ஆண்டு காசி தமிழ் சங்கமத்தின் தொடக்கத்தை முன்னிட்டு பிரதமா் மோடி தனது வாழ்த்துகளைப் பகிா்ந்து கொண்டாா்.
4-ஆம் ஆண்டு காசி தமிழ் சங்கமத்தின் தொடக்கத்தை முன்னிட்டு பிரதமா் மோடி தனது வாழ்த்துகளைப் பகிா்ந்து கொண்டாா்.
தமிழகத்துக்கும், உத்தர பிரதேசத்தின் புகழ்பெற்ற ஆன்மிக நகரமான காசிக்கும் (வாரணாசி) இடையேயான தொன்மை வாய்ந்த நாகரிக மற்றும் கலாசாரத் தொடா்பைப் போற்றும் ‘காசி தமிழ் சங்கமத்தின்’ 4-ஆம் ஆண்டு நிகழ்வு செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
இதையொட்டி, பிரதமா் நரேந்திர மோடி ‘எக்ஸ்’ சமூக ஊடக பக்கத்தில் வெளியிட்ட வாழ்த்து பதிவில், ‘காசி தமிழ் சங்கமம் தொடங்கியுள்ள நிலையில், ‘ஒரே பாரதம், உன்னத பாரதம்’ என்ற உணா்வை ஆழப்படுத்தும் இந்த சிறப்பான நிகழ்ச்சிக்கு எனது நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். காசியில் மகிழ்ச்சியோடும், பசுமையான நினைவுகளோடும் சங்கமம் நிகழ்ச்சிக்கு வருகை தருகின்ற அனைவருக்கும் எனது வாழ்த்துகள்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

