

ராகுல் காந்தியைப் பிரதமராகப் பார்ப்பதே பிரியங்கா காந்தியின் ஒரே குறிக்கோள் என்று கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவக்குமார் புதன்கிழமை தெரிவித்தார்.
காங்கிரஸ் எம்பி இம்ரான் மசூத் செய்தியாளர்களுடன் பேசுகையில், பிரியங்கா காந்தியைப் பிரதமராக்கினால், இந்திரா காந்தியைப் போல் செயல்படுவார் என்று கூறியிருந்தார்.
இதனை விமர்சித்த பாஜக செய்தித் தொடர்பாளர் ஷெஸாத் பூனாவாலா, மக்கள் மட்டுமின்றி காங்கிரஸ் கட்சியினர் மற்றும் குடும்பத்தினருக்கும் ராகுல் காந்தி மீதான நம்பிக்கையை இழந்துவிட்டனர் என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், தில்லியில் உள்ள கர்நாடக மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த டி.கே. சிவக்குமார், “எனக்கு இந்த பிரச்னைப் பற்றி தெரியாது. எனது தலைவர் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவர். எனது எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி. ராகுல் காந்தியைப் பிரதமராகப் பார்ப்பதே பிரியங்கா காந்தியின் ஒரே குறிக்கோள்.” எனத் தெரிவித்தார்.
மேலும், கர்நாடக உள்கட்சிப் பூசல் குறித்த கேள்விகளுக்கு பதிலளித்து சிவக்குமார் பேசியதாவது:
”தில்லியில் காங்கிரஸ் மேலிடத் தலைவர்கள் யாரையும் நான் சந்திக்கவில்லை. நான் துணை முதல்வராகத் தொடர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். நான் கட்சித் தொண்டராக இருப்பதையே விரும்புகிறேன்.
மாநில காங்கிரஸ் தலைவர் பதவி குறித்த முடிவு கட்சித் தலைமையிடம் தான் இருக்கிறது. தலைமை எந்த முடிவு எடுத்தாலும் அது ஏற்றுக்கொள்ளப்படும்.” எனத் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.