மகாராஷ்டிரத்தில் மக்களவைத் தேர்தலுக்கும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கும் இடையிலான 5 மாதங்களில் 39 லட்சம் புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
மகாராஷ்டிரத்தில் கடந்தாண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்தது.
இந்த தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாக காங்கிரஸ் உள்ளிட்ட மகா விகாஸ் அகாடி கூட்டணிக் கட்சிகள் குற்றச்சாட்டை எழுப்பியிருந்தனர்.
இதையும் படிக்க : தமிழக பேரவைத் தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ் போட்டி!
இந்த நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, சிவசேனை (உத்தவ் அணி) எம்பி சஞ்சய் ரெளத் மற்றும் தேசியவாத காங்கிரஸ்(சரத் பவார்) எம்பி சுப்ரியா சுலே ஆகியோர் செய்தியாளர்களை கூட்டாகச் சந்தித்து மகாராஷ்டிர தேர்தல் முரண்பாடுகள் குறித்து பேசினர்.
அப்போது ராகுல் காந்தி பேசியதாவது:
”மகாராஷ்டிரத்தில் போட்டியிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தி நாங்கள் அமர்ந்துள்ளோம். வாக்காளர்கள் மற்றும் வாக்குப் பட்டியல் தொடர்பாக எங்கள் குழுக்கள் ஆய்வு நடத்தியுள்ளன. பல முரண்பாடுகளை கண்டறிந்துள்ளோம்.
2019 சட்டப்பேரவைத் தேர்தலுக்கும் 2024 மக்களவைத் தேர்தலுக்கு இடைப்பட்ட 5 ஆண்டுகளில் மகாராஷ்டிரத்தில் புதிதாக 32 லட்சம் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆனால், 2024 மக்களவைத் தேர்தலுக்கும் 2024 மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலுக்கும் இடைப்பட்ட 5 மாதங்களில் மட்டும் 39 லட்சம் புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதில், புதிதாக சேர்க்கப்பட்ட 39 லட்சம் வாக்காளர்கள் யார்? இந்த எண்ணிக்கையானது ஹிமாசல் பிரதேசத்தின் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கைக்கு சமம். மகாராஷ்டிரத்தில் வாக்கு செலுத்தும் வயதுடைய மொத்த மக்கள் தொகையைவிட வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகமாகவுள்ளது. திடீரென வாக்காளர்கள் உருவானது எப்படி?
எங்களுக்கு மக்களவை மற்றும் சட்டப்பேரவைக்கான வாக்காளர் பட்டியல் தேவை, அவர்களின் பெயரும் முகவரியும் தேவை. புதிய வாக்காளர்கள் யார் என்பதை தெரிந்துகொள்ள விரும்புகிறோம்.
பல வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர், ஒரு வாக்குச்சாவடியில் இருந்து மற்றொரு வாக்குச்சாவடிக்கு மாற்றப்பட்டுள்ளனர். இவர்களின் தலித், பழங்குடி மற்றும் சிறுபான்மை சமூகத்தினரே அதிகம்.
தேர்தல் ஆணையத்திடம் கேட்கப்பட்ட எந்த கேள்விகளுக்கும் பதில் அளிக்கவில்லை. பதிலளிக்காததற்கு ஒரே காரணம், அவர்களின் செயலில் தவறு இருப்பதுதான். குற்றச்சாட்டுகளை முன்வைக்கவில்லை. தரவுகளை தெளிவாக வழங்குகிறோம்” என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
கல்வித் துறை ஊழல்களை கண்டுகொள்ளாத பிரதமர் மோடி: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

வயநாடு நிலச்சரிவு: நேரில் வராத ராகுல், பிரியங்கா! பாஜக கடும் விமா்சனம்!

பணம் பறிக்கும் இயந்திரமாக மாறிய கல்வி அமைப்பு: பிரதமர் மௌனம் ஏன்? ராகுல் குற்றச்சாட்டு!

உ.பி. பேரவைத் தேர்தலில் சமாஜவாதி - காங்கிரஸ் கூட்டணி?
விடியோக்கள்

வியத்நாம் படகு விபத்தில் தப்பித்தது எப்படி? உயிர்தப்பிய நிர்மல் குமார் பேட்டி | Vietnam boat tragedy

மணமாலை வரம் தரும் முருகன் | Kalyana Kandha swamy Kovil | Madipakkam | கல்யாண கந்தசுவாமி கோயில்| கோயில் வலம் -3

தவெகவில் இணைய என்னை யாரும் அழைக்கவில்லை! - எம்.ஆர். விஜயபாஸ்கர் விளக்கம் | TVK | ADMK



