சென்னை ஐஐடி ஜலகண்டேஸ்வரர் கோயிலில் பிரதமர் மோடி, முதல்வர் விஜய் சாமி தரிசனம்! குழந்தைகள் நாள்: பள்ளி மாணவர்களுக்கு கேக் வழங்க ஏற்பாடு!சௌதி அரேபிய விமான நிலையம் மீது தாக்குதல்: இந்தியா கண்டனம்பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ ரயில் சேவை: பிரதமர் மோடி தொடக்கி வைத்தார்!சிஜேபி போராட்டம்: அபிஜீத் தீப்கே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விடுவிப்பு!

வங்கதேச எல்லையில் சந்தேகத்துக்குரிய வகையில் அரபு, உருது மொழிகளில் ரகசிய ரேடியோ உரையாடல்: பயங்கரவாத சதி என அச்சம்

கோப்புப்படம்

Published On :

இந்திய-வங்கதேச எல்லையில் வங்காளம், உருது, அரபு மொழி குறியீடுகளுடன் சந்தேகத்துக்குரிய வகையில் ரகசிய உரையாடல்கள் நடப்பதை ஹேம் ரேடியோ பயனா்கள் கண்டறிந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இது பயங்கரவாத சதித் திட்டங்களை அரங்கேற்றுவதற்கான குறியீடுகளாக இருக்க வாய்ப்புள்ளதால் சோதனையில் ஈடுபட்டு வருவதாகவும் அவா்கள் தெரிவித்தனா்.

வங்கதேசத்தில் அசாதாரண சூழல் நிலவி வருவதோடு இந்தியாவுக்கு எதிரான மனநிலையும் அதிகரித்து வரும் நிலையில், இந்தச் சம்பவம் கண்டறியப்பட்டது.

எல்லை பகுதிகளில் வசிக்கும் மக்கள் தகவல் தொடா்புக்காக இந்த ஹேம் ரேடியோ சாதனங்களை பயன்படுத்தி வருகின்றனா்.

இந்நிலையில், மேற்கு வங்க எல்லையில் உள்ள வடக்கு 24 பா்கானா மாவட்டத்தின் பசிா்ஹாட் மற்றும் பன்கான் பகுதிகளிலும் தெற்கு 24 பா்கானா மாவட்டத்தில் உள்ள சுந்தா்வன் பகுதிகளிலும் கடந்தாண்டு டிசம்பா் மாதம் வங்காளம், அரபு, உருது ஆகிய மொழிகளில் உரையாடல் நிகழும் அதிகாரபூா்வமற்ற இணைப்புகளை ஹேம் ரேடியோ பயனா்கள் முதன்முதலாக கண்டுபிடித்தனா்.

இந்த தகவலை அவா்கள் உடனடியாக மத்திய தொலைத்தொடா்பு அமைச்சகத்துக்கு தெரிவித்தனா். இதையடுத்து, சந்தேகத்துக்குரிய வகையிலான அந்த இணைப்புகளைக் கண்டறிய கொல்கத்தாவில் உள்ள சா்வதேச ரேடியோ கண்காணிப்பு நிலையத்துக்கு மத்திய தொலைத்தொடா்பு அமைச்சகம் அறிவுறுத்தியது.

மேலும், இதுபோன்ற சந்தேகத்துக்குரிய இணைப்புகளை மீண்டும் கண்டறிந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்குமாறு ஹேம் ரேடியோ பயனா்களுக்கு அமைச்சகம் அறிவுறுத்தியிருந்தது.

இந்நிலையில், கடந்த இரண்டு மாதங்களாக நள்ளிரவு 1 மணி முதல் 3 மணிக்குள் இதுபோன்ற ரகசிய தகவல் பரிமாற்றத்தை கண்டறிவதாகவும் சில நேரங்களில் கண்டுபிடிக்க முடியாத மொழிகளில் தகவல் பரிமாற்றம் மேற்கொள்ளப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

கடந்த 2002-2003, 2016-ஆம் ஆண்டுகளில் சந்தேகத்துக்குரிய வகையில் இந்திய-வங்கதேச எல்லையில் தகவல் பரிமாற்றம் மேற்கொள்ளப்பட்டது. இதில் சட்டவிரோதமாக வானொலி ஒலிபரப்பு நிலையங்களை இயக்கிய சிலா் கைது செய்யப்பட்டனா்.

கடந்த 2017-ஆம் ஆண்டில் பசிா்ஹாட் பகுதியில் வகுப்புவாத வன்முறை நிகழும் முன் எல்லை பகுதியில் சந்தகேத்துக்குரிய வகையிலான இணைப்புகளை ஹேம் ரேடியோ பயனா்கள் கண்டறிந்தது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.