பொய்க் கூறி மக்களின் நம்பிக்கையைப் பெற முடியாது! ராகுலுக்கு அமித் ஷா அறிவுரை!இரு மாநில வளர்ச்சி குறித்து ஆலோசனை: ஆந்திரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஉச்ச நீதிமன்றத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உண்டு: ராகுல் காந்திமின் கட்டணம் என்ற பெயரில் மக்களிடம் பகல் கொள்ளை: உதயநிதி குற்றச்சாட்டுசென்னைக்கு 3 டிஎம்சி நீர் வழங்க ஆந்திர அரசு முடிவு!ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ. 35-க்கு வாங்க வேண்டிய அவசியம் என்ன? அரசுக்கு பிரேமலதா கேள்விபோராட்டக்காரர்களுக்கு ஜந்தர் மந்தர் மூடப்பட்டால் நாடு தழுவிய போராட்டம் வெடிக்கும்: சிஜேபிடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 40 காசுகள் உயர்ந்து ரூ. 95.38 ஆக நிறைவு!பங்குச் சந்தை மீட்சி: சென்செக்ஸ் 1,109 புள்ளிகளுடனும், நிஃப்டி 359 புள்ளிகளுடன் நிறைவு!மத்திய அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதாக எல். முருகன் அறிவிப்பு!

இந்தியாவுக்கு எஃப் 35 ரக விமானம்: டிரம்ப் அறிவிப்பு

இந்தியாவுக்கு எஃப் 35 ரக விமானம் வழங்கவுள்ளதாக டிரம்ப் அறிவிப்பு...

மோடி - டிரம்ப் சந்திப்பு.

Published On :

இந்தியாவுக்கு எஃப் 35 ஸ்டெல்த் போர் விமானங்களை வழங்கவுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.

வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பை நேரில் சந்தித்து பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனையைத் தொடர்ந்து இருவரும் ஒன்றாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அமெரிக்கா - இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தங்கள் குறித்து டிரம்ப் பேசியதாவது:

இந்தாண்டு முதல் இந்தியாவுக்கு அதிகளவிலான ராணுவ தளவாடங்களை விற்பனை செய்யவுள்ளோம். இந்தியாவுக்கு எஃப் 35 ஸ்டெல்த் போர் விமானங்களை வழங்கவுள்ளோம்.

இந்தியாவின் எரிவாயு பாதுகாப்பை உறுதி செய்வதற்காக எண்ணெய் மற்றும் எரிவாயு வர்த்தகத்தில் அதிக கவனம் செலுத்தவுள்ளோம்.

2030 ஆம் ஆண்டுக்குள் இரு நாடுகளின் வர்த்தக பரிவர்த்தனை 500 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இலக்கை நிர்ணயித்துள்ளோம்.

விரைவில் இரு நாடுகளுக்கு இடையே பல்வேறு வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்தாவதை உறுதி செய்துள்ளோம்” என்றார்.

இந்தியா - சீனா, இந்தியா - பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் தொடர்ந்து பதற்றம் நிலவி வரும் நிலையில், அதிநவீன எஃப் 35 ஸ்டெல்த் போர் விமானங்களை இந்தியாவுக்கு வழங்க அமெரிக்கா அறிவித்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கின்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.