புது தில்லி: பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்பது போல, தில்லியைச் சேர்ந்த பெண் தாதாவாக செயல்பட்டு வந்த ஸோயா கான் ரூ.1 கோடி மதிப்புள்ள போதைப்பொருள்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
போதைப்பொருள் கும்பல் தலைவன் ஹஷிம் பாபாவின் மனைவியான ஸோயா கான், சிறையில் இருக்கும் தனது கணவருக்காக, இந்த ஒட்டுமொத்த ரௌடி கும்பலையும் நிர்வகித்து வந்தாலும், இவரது பெயர் எந்த குற்றச்சம்பவங்களிலும் தொடர்பில் இல்லாதவாரு பார்த்துவந்ததால், காவல்துறையினரால் இவரை நெருங்க முடியாமல் இருந்தது.
இதுவரை அவருக்கு எதிராக ஒரு குற்றச்சாட்டும், ஆதாரமும் காவல்துறைக்குக் கிடைக்காமல் இருப்பதுதான் மிகப்பெரிய பின்னடைவாக இருந்து வந்துள்ளது.
கடத்தல் முதல் கொலை வரை பல வழக்குகள் ஹஷிம் பாபா மீது உள்ளது. பாபா கைது செய்யப்பட்ட பிறகு ஒட்டுமொத்த ரௌடி கும்பலையும் தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளார் ஸோயா கான்.
போதைப் பொருள் கடத்தலை முக்கியத் தொழிலாக இந்த கும்பல் செய்து வருகிறது. ஆனால், சினிமாவில் காட்டும் நம்ம ஊர் பெண் தாதாக்களைப் போல அல்லாமல், ஸோயா பார்க்க சினிமா நட்சத்திரம் போல மிகப்பெரிய விஐபிகள் கொடுக்கும் விருந்து கேளிக்கைகளில் பங்கேற்பது, விலை உயர்ந்த கார், ஆடை அலங்காரம் என கோடீஸ்வர வாழ்க்கையை வாழ்ந்து வந்தார்.
அது மட்டுமல்ல, எப்போதும் ஆயுதம் தாங்கிய நான்கு பேரின் பாதுகாப்புடன்தான் ஸோயா வலம் வந்துள்ளார்.
இவருக்கு சமூக ஊடகத்தில் ஏராளமான பின்தொடர்வோர் இருப்பது வேறுகதை. எது எப்படியிருந்தாலும் தனது கணவர் அடைக்கப்பட்டிருக்கும் திஹார் சிறைக்கு அவர் அடிக்கடி செல்வதும், அங்குதான், தொழில் ரகசியங்களை சமிக்ஞைகள் வாயிலாக பாபா தனது மனைவிக்கு சொல்வதாகவும், கும்பலின் நிதி மற்றும் செயல்பாடுகள் அனைத்தையும் இருவரும் பேசிக் கொள்வார்கள் என்றும் கூறப்படுகிறது.
இந்த கும்பல் மூலம் மிகப்பெரிய அளவில் போதைப் பொருள்களைக் கடத்தி கோடிக்கணக்கில் வருவாய் ஈட்டிவந்ததும், அதில் ஸோயா உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
பல்வேறு தீவிர நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக, ஸோயா கான் வடகிழக்கு தில்லியிலிருந்து கைது செய்யப்பட்டார். இந்த முறை, அவர் கையும் களவுமாகக் கைது செய்யப்பட்டுள்ளார். ரூ.1 கோடி மதிப்புள்ள போதைப் பொருள்களுடன் அவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் மீது பல வழக்குகளில் தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகப் பார்வை விழுந்துள்ளது.
ஸோயா கான் குடும்பமே குற்றப் பின்னணி கொண்டதாக உள்ளது. பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக, ஸோயாவின் தாய் 2024ஆம் ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தந்தை போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைதானவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விமான நிலையத்தில் ரூ.5 கோடி மெத்தபெட்டமைன் பறிமுதல்
ரூ. 1.56 கோடி மதிப்பிலான இணையவழி முதலீட்டு மோசடி கண்டுபிடிப்பு - இருவா் கைது
தில்லி விமான நிலையத்தில் ரூ.2.43 கோடி மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்: பயணி கைது
தில்லி விமான நிலையத்தில் ரூ.4 கோடி மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்: இருவா் கைது
விடியோக்கள்
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK



