பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

தில்லி தேர்தலுக்கான பிரசாரப் பாடலை வெளியிட்டது ஆம் ஆத்மி!

ஆம் ஆத்மி பிரசாரப் பாடலை வெளியிட்டது பற்றி..

News image
அரவிந்த் கேஜரிவால்
Updated On :7 ஜனவரி 2025, 9:58 am

DIN

தில்லியில் சட்டப்பேரவைத் தேர்தல் நிகழவுள்ள நிலையில் ஆம் ஆத்மி கட்சியின் பிரசாரப் பாடலை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் வெளியிட்டார்.

இந்த நிகழ்ச்சியில் அரவிந்த் கேஜரிவால், தில்லி முதல்வர் அதிஷி, முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மற்றும் பிற மூத்த உறுப்பினர்கள் உள்பட முக்கிய ஆம் ஆத்மி தலைவர்கள் கலந்து கொண்டனர்.

பிர் லேயேங்கே கேஜரிவால்....என்ற இப்பாடல் மீண்டும் கேஜரிவாலை கொண்டு வருவோம் என்று தொடங்குகிறது. இப்பாடல் கட்சியின் முக்கிய தேர்தல் வாக்குறுதிகளான சமீபத்தில் தொடங்கப்பட்ட நலத்திட்டங்கள், தில்லியில் பெண்களுக்கு மாதம் ரூ. 2,100 வழங்கும் முக்யமந்திரி மகிளா சம்மன் யோஜனா மற்றும் அனைத்து மருத்துவமனைகளிலும் மூத்த குடிமக்களுக்கு இலவச சிகிச்சையை உறுதி செய்யும் சஞ்சீவனி யோஜனா உள்பட இந்த பாட்டின் வரிகளாக இணைக்கப்பட்டுள்ளனர்.

பாடலை வெளியிட்ட கேஜரிவால் பேரவைத் தேரதல் தில்லி மக்களுக்கு ஒரு பண்டிகையாகும் என்றார். ஆம் ஆத்மியின் பிரசாரப் பாடல்களுக்காக மக்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

முன்னதாக 2015-யிலும், பின்னர் 2020-ல், தற்போது 2025-லும் பாடல் வெளியிடப்பட்டுள்ளது. பிறந்தநாள், திருமணங்கள் மற்றும் பிற கொண்டாட்டங்களிலும் இந்தப் பாடலை ஒளிபரப்புங்கள் விளம்பரப்படுத்துங்கள் என்று அவர் கூறினார்.

தில்லி சட்டப்பேரவைத் தேர்தல் பிப்ரவரி 5-ம் தேதி ஒரே கட்டமாக நிகழும் என்று இந்தியத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. பிப்.8-ல் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி, காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகள் தனித்தனியாகப் போட்டியிடுகின்றனர். தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், ஆம் ஆத்மி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்து முடித்தது. பாஜக முதல் பட்டியல் வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.