ஆசிய விளையாட்டு: ஓட்டப் பந்தயத்தில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்கு பதக்கம்!மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் பிரசாரத்தில் 5,000 பேருக்கு மட்டும் அனுமதிநாட்டின் முக்கிய தலைவர்கள் தோற்கின்றனர்! மோடி, அமித் ஷா தோற்காதது ஏன்? ராகுல் காந்தியுபிஐ கட்டணம்! அமெரிக்க நிறுவனங்கள் பயனடைய இந்தியர்கள் ஏன் பணம் செலுத்த வேண்டும்? காங்கிரஸ் எம்.பி. கேள்விஇடைத்தேர்தல்! மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் நாளை பிரசாரம்: 5,000 பேருக்கு மட்டும் அனுமதிஅருண் ஐபிஎஸ் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!தமிழக அரசு ஊழியர்களுக்கும் நாளை சம்பளம்!பாஜக தொடர்ந்து ஆட்சியில் நீடிப்பது எப்படி? ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் - ராகுல்ஜெம் வீரமணி வழக்கு: சாந்தி, மகேந்திர சிம்ஹனுக்கு 3 நாள்கள் போலீஸ் காவல்!ஞானேஷ் குமார் பதவி விலக 48 மணிநேரம் கெடு; நாடு தழுவிய போராட்டம்! - சிஜேபி எச்சரிக்கை!ஞானேஷ் குமார் பதவி விலக 48 மணிநேரம் கெடு; நாடு தழுவிய போராட்டம்! - சிஜேபி எச்சரிக்கை!

இந்தியாவில் முதல்முறையாக தேசிய மஞ்சள் வாரியம் தொடக்கம்!

இந்தியாவில் முதல்முறையாக தேசிய மஞ்சள் வாரியம் தொடங்கப்பட்டுள்ளது.

Published On :

நிஸாமாபாத்தில் தேசிய மஞ்சள் வாரியத்தை மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் இன்று(ஜன. 14) தொடங்கி வைத்தார். மஞ்சள் வாரிய தலைவராக பல்லே கங்கா ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளார்.

புது தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தேசிய மஞ்சள் வாரிய தொடக்க விழாவில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் பியூஷ் கோயல், “உலகளாவிய மஞ்சள் உற்பத்தியில் 70 சதவிகிதம் இந்தியாவில் மேற்கொள்ளப்படுகிறது என்றும் இந்தியாவில் 30 வகையான மஞ்சள் உற்பத்தி செய்யப்படுகிறது” என்றும் தெரிவித்தார்.

தமிழகம், ஆந்திர பிரதேசம், தெலங்கானா, மகாராஷ்டிரம், மத்திய பிரதேசம், மேகாலயா ஆகிய மாநிலங்களில் உள்ள மஞ்சள் விவசாயிகளின் நலனில் சிறப்பு கவனம் செலுத்தும் நோக்கில் தெலங்கானா மாநிலம் நிஸாமாபாத்தில் தேசிய மஞ்சள் வாரியம் தொடங்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய மஞ்சள் வாரியத்தில் ஏற்றுமதியாளர்கள், உற்பத்தியாளர் அமைப்புகளின் பிரதிநிதிகள் சேர்க்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மஞ்சளின்  மருத்துவ பண்புகள், அதன் விளைச்சலை அதிகரிப்பதற்கான வழிகள், மஞ்சள் வர்த்தகத்தை அதிகரிப்பதற்கான வழிகள் ஆகியவை குறித்த ஆராய்ச்சியில் மஞ்சள் வாரியம் ஈடுபடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.