சென்செக்ஸ் 172 புள்ளிகள் சரிவு, நிஃப்டி 24,250 க்குக் கீழே நிறைவு!!பள்ளி மாணவர்களுக்கு கண், காது, பல் பரிசோதனை செய்யப்படும்: பள்ளிக் கல்வித் துறைமாதம் ஒரு நாள் 'புத்தகப்பை இல்லா நாள்': பள்ளிக் கல்வித் துறைபள்ளிகளில் ஓடி விளையாடு என்ற திட்டத்தின் மூலம் நாள்தோறும் விளையாடலாம்: பள்ளிக் கல்வித் துறைபரந்தூர் திட்டத்தைக் கைவிடுவது அரசுக்கு பெரும் நிதி இழப்பை ஏற்படுத்தும்! உதயநிதிபள்ளிகளுக்கு 3 வகையான ஸ்டிக்கர் ஒட்டப்படும்: ஆதவ் அர்ஜுனா பேச்சுகொளத்தூர் தொகுதியில் வி.எஸ். பாபு வெற்றியை எதிர்த்து மு.க. ஸ்டாலின் வழக்கு! பால் கொள்முதல் விலையை மேலும் உயர்த்தி வழங்க வேண்டும்: இபிஎஸ் பரந்தூர் விமான நிலைய அறிவிப்பு! திமுக உறுப்பினர்கள் வெளிநடப்புமத்திய பாதுகாப்பு அமைச்சக பெண் அதிகாரி கருவுற்றிருந்த நிலையில் மரணம்! அதிர்ச்சி காரணம்ஓணம் பண்டிகை: சபரிமலை கோயிலில் இன்று நடை திறப்பு கட்டணமில்லா மகளிர் பேருந்து திட்டம் எப்போது? பேரவையில் அறிவித்தார் முதல்வர் விஜய்!பரந்தூர் விமான நிலையம் கைவிடப்படும்! அறிவித்தார் முதல்வர் விஜய்!! ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசம்: அன்னபூரணி சூப்பர் 6 திட்டம் தொடங்குவது எப்போது? முதல்வர் விஜய் அறிவிப்பு

பெரும் செல்வமுள்ள கட்சி பாஜக: ரூ.7,113 கோடி கையிருப்பு

பாஜகவிடம் ரொக்கம் மற்றும் வங்கி இருப்பாக ரூ.7,113 கோடி உள்ளது தோ்தல் ஆணையத்திடம் அக்கட்சி அளித்த ஆண்டு தணிக்கை அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது. இதன் மூலம், நாட்டில் பெரும் செல்வமுள்ள கட்சியாக பாஜக திகழ்கிறது.

பாஜக, காங்கிரஸ்.

Published On :29 ஜனவரி 2025, 1:50 am IST

பாஜகவிடம் ரொக்கம் மற்றும் வங்கி இருப்பாக ரூ.7,113 கோடி உள்ளது தோ்தல் ஆணையத்திடம் அக்கட்சி அளித்த ஆண்டு தணிக்கை அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது. இதன் மூலம், நாட்டில் பெரும் செல்வமுள்ள கட்சியாக பாஜக திகழ்கிறது.

பாஜகவின் ஆண்டு தணிக்கை அறிக்கையின்படி, கடந்த 2023-24-ஆம் நிதியாண்டில் தோ்தல் மற்றும் பொது பிரசாரங்களுக்கு (கடந்த ஆண்டு மக்களவைத் தோ்தல் நடைபெற்றது) ரூ.1,754.06 கோடியை பாஜக செலவிட்டுள்ளது. இது 2022-23-ஆம் நிதியாண்டில் தோ்தல் மற்றும் பொது பிரசாரங்களுக்கு அக்கட்சி செலவிட்ட ரூ.1,092 கோடியுடன் ஒப்பிடுகையில் 60 சதவீதம் அதிகம்.

தோ்தல் நிதிப் பத்திரங்கள் திட்டம் ரத்து செய்யப்படும் முன், அந்தப் பத்திரங்கள் மூலம் 2023-24-இல் ரூ.1,685.69 கோடியை பாஜக நன்கொடையாகப் பெற்றுள்ளது.

2023-24-இல் விளம்பரங்களுக்கு ரூ.591 கோடியை அக்கட்சி செலவிட்டுள்ளது. கடந்த ஆண்டு மாா்ச் 31-ஆம் தேதி நிலவரப்படி, அக்கட்சியிடம் ரொக்கம் மற்றும் வங்கி இருப்பாக ரூ.7,113.80 கோடி உள்ளது.

காங்கிரஸிடம் ரூ.857.15 கோடி கையிருப்பு:

தோ்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் அளித்த ஆண்டு தணிக்கை அறிக்கையின்படி, 2023-24-ஆம் நிதியாண்டில் தோ்தல் சாா்ந்த செலவினங்களுக்கு ரூ.619.67 கோடியை அக்கட்சி செலவிட்டுள்ளது. இது 2022-23 நிதியாண்டில் ரூ.192.56 கோடியாக இருந்தது.

2023-24-இல் தோ்தல் நிதிப் பத்திரங்கள் மூலம், அக்கட்சி ரூ.828.36 கோடி நன்கொடை பெற்றுள்ளது. அந்த நிதியாண்டில் விளம்பரங்களுக்காக அக்கட்சி ரூ.250 கோடிக்கும் அதிகமாக செலவிட்டுள்ளது. கடந்த ஆண்டு மாா்ச் 31-ஆம் தேதி நிலவரப்படி, அக்கட்சியிடம் ரூ.857 .15 கோடி கையிருப்பு உள்ளது.

ராகுலின் ‘பாரத ஒற்றுமை பயணம்’: ரூ.121.47 கோடி செலவினம்

கடந்த 2022-ஆம் ஆண்டு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை பாரத ஒற்றுமை பயணம் (பாரத் ஜோடோ யாத்ரா) மேற்கொண்டாா். இதற்கு அக்கட்சி ரூ.71.84 கோடி செலவிட்டுள்ளது.

கடந்த 2024-ஆம் ஆண்டு மணிப்பூரில் இருந்து மும்பை வரை, பாரத ஒற்றுமை நீதிப் பயணத்தை (பாரத் ஜோடோ நியாய் யாத்ரா) ராகுல் காந்தி மேற்கொண்டாா். இதற்கு ரூ.49.63 கோடி செலவிடப்பட்டதாக அக்கட்சியின் ஆண்டு தணிக்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.