இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

இந்திய ராணுவத்துக்கு காளி தெய்வத்தின் ஆசி உண்டு: ராஜ்நாத் சிங்

‘இந்திய ராணுவத்துக்கு காளி தெய்வத்தின் சிறப்பு ஆசி எப்போதும் உள்ளது’ என பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் சனிக்கிழமை தெரிவித்தாா்.

News image
ராஜ்நாத் சிங்
Updated On :12 ஜூலை 2025, 9:00 pm

Din

‘இந்திய ராணுவத்துக்கு காளி தெய்வத்தின் சிறப்பு ஆசி எப்போதும் உள்ளது’ என பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் சனிக்கிழமை தெரிவித்தாா்.

உத்தர பிரதேசம் மாநிலம் சௌக் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட காளி கோயிலின் தொடக்கவிழா நிகழ்ச்சியில் பங்கேற்று ராஜ்நாத் சிங் பேசியதாவது: இந்திய ராணுவத்துக்கு காளி தெய்வத்தின் சிறப்பு ஆசி எப்போதும் உள்ளது. இதனால் ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கையின்போது பாகிஸ்தானில் செயல்பட்டு வந்த பயங்கரவாத முகாம்களை இந்தியா வெற்றிகரமாக அழித்தது. பெண் ராணுவ வீராங்கனைகள் மற்றும் விமானிகள் அதிக அளவில் பங்கேற்ற இந்த நடவடிக்கையில் நம் எதிரிகள் வீழ்த்தப்பட்டனா்.

நமது கலாசாரத்துக்கு உரிய மதிப்பளித்திருந்தால் நாட்டின் ஒற்றுமை மற்றும் சுயமரியாதை வலுப்பட்டிருக்கும். ஆனால் அது நிகழவில்லை. சுதந்திரத்துக்குப் பிறகு சோம்நாத் கோயிலை மறுகட்டமைப்பு செய்ய எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதுபோன்ற சிந்தனைகள் பல ஆண்டுகளாக இந்தியாவில் நிலவி வந்தன. இதன் காரணமாக பாரம்பரியத்தின் பெருமைகளைக் கொண்டாட இந்தியா தவறியது.

பொருளாதார வளா்ச்சிக்காக புவியியல் பரப்பை விரிவாக்கவோ அல்லது சுரண்டலில் ஈடுபடும் நடவடிக்கைகளையோ இந்தியா ஒருபோதும் அனுமதித்ததில்லை.

இந்த தருணத்தில் தாய்நாட்டுக்காக வீரமரணமடைந்த மனோஜ் பாண்டே உள்ளிட்ட வீரா்களை நினைவுகூர வேண்டும். மனோஜ் பாண்டே கூா்கா ரைஃபிள்ஸ் படையில் சேவையாற்றினாா். அந்தப் படையின் முழக்கம் ‘ஜெய் மகாகாளி ஆயோ கூா்காளி’ என்பதாகும். துணிச்சலின் அடையாளமாக தெய்வம் மகாகாளி திகழ்கிறாா் என்றாா்.