எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

6 ஆண்டுகளில் 16.83 கோடி வேலைவாய்ப்புகள் அதிகரிப்பு! ரிசர்வ் வங்கி தகவல்

நாட்டில் வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக இந்திய ரிசர்வ் வங்கி தகவல்

News image
Updated On :26 ஜூலை 2025, 10:30 am

இணையதளச் செய்திப் பிரிவு

நாட்டில் வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றத்தில் இந்திய ரிசர்வ் வங்கி அளித்த தரவுகளின்படி, 2018 ஆம் நிதியாண்டில் 47.5 கோடியாக இருந்த வேலைவாய்ப்புகள், 2024 ஆம் நிதியாண்டில் 63.44 கோடியாக அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. அதாவது, 2018 - 2024 இடைப்பட்ட நிதியாண்டுக் காலத்தில் 16.83 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.

இந்த குறிப்பிட்ட அதிகரிப்பானது வேலையின்மை விகிதங்கள் குறைவு, தொழிலாளர் பங்களிப்பு உள்ளிட்ட வேலைவாய்ப்பு தொடர்பானவற்றில் நேர்மறையான முன்னேற்றங்களைக் காட்டுகிறது.

இதே காலகட்டத்தில் 15 வயது முதல் அதற்கு மேற்பட்ட வயதுடைய தொழிலாளர்களின் விகிதமும் 49.8 சதவிகிதத்திலிருந்து 60.1 சதவிகிதமாக உயர்ந்ததுடன், தொழிலாளர்களின் விகிதமும் 46.8 சதவிகிதத்திலிருந்து 58.2 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.

2020-ல் 28.7 சதவிகிதமாக இருந்த பெண் தொழிலாளர்களின் எண்ணிக்கையானது, 2024-ல் 40.3 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. 2018-ல் 6 சதவிகிதமாக இருந்த வேலைவாய்ப்பின்மை, 2024-ல் 3.2 சதவிகிதமாகக் குறைந்தது.

summary

Workforce Touches 64.33 Crore in FY24 from 47.5 Crore in FY18

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.