
பிகார் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு ஓய்வூதியத்தை உயர்த்தியுள்ளார் அந்த மாநில முதல்வர் நிதிஷ் குமார்.
பிகாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தனம் - பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகின்றது. மாநிலத்தில் மொத்தம் உள்ள 243 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் அக்டோபர்-நவம்பரில் தேர்தல் நடைபெற உள்ளது.
மீண்டும் ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள ஐக்கிய ஜனதா தளம்-பாஜக அடங்கய தேசிய ஜனநாயகக் கூட்டணி தீவிரமாகச் செயல்பட்டு வரும் நிலையில், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு நல்ல செய்தியை அறிவித்துள்ளார்.
இந்த நிலையில், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு இதற்கு முன்னதாக ரூ. 400 ஓய்வூதியம் வழங்கப்பட்டிருந்தது. அது தற்போது ரூ.1,100 ஆகந உயர்த்தப்பட்டுள்ளதாக முதல்வர் நிதிஷ் குமார் அறிவித்தார்.
இதுதொடர்பாக நிதிஷ் குமார் வெளியிட்ட அறிக்கையில்,
சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் அனைத்து முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் விதவை பெண்களுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் ரூ.400, தற்போது ரூ.1,100 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
வரும் ஜூலை முதல் அதிகரித்த ஓய்வூதியம் அனைத்து பயனாளிகளுக்கும் கிடைக்கும் இந்தத் தொகையானது மாதத்தின் 10-ம் தேதிக்குள் அனைவரின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். இந்த ஓய்வூதியம் மூலம் 1,9,69,255 பயணிகள் பயனடைவார்கள் என்று அவர் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.