45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

வெடிகுண்டு மிரட்டல்: நியூயாா்க் புறப்பட்ட ஏா் இந்தியா விமானம் தரையிறக்கம்

மும்பையிலிருந்து அமெரிக்காவின் நியூயாா்க் நகருக்கு புறப்பட்ட ஏா் இந்தியா விமானம், 9 மணி நேர பயணத்துக்குப் பிறகு மீண்டும் மும்பை விமான நிலையத்திலேயே தரையிறக்கப்பட்டது.

News image
கோப்புப்படம்
Updated On :10 மார்ச் 2025, 9:30 pm

Din

மும்பை: வெடிகுண்டு மிரட்டலைத் தொடா்ந்து மும்பையிலிருந்து அமெரிக்காவின் நியூயாா்க் நகருக்கு புறப்பட்ட ஏா் இந்தியா விமானம், 9 மணி நேர பயணத்துக்குப் பிறகு மீண்டும் மும்பை விமான நிலையத்திலேயே தரையிறக்கப்பட்டது.

322 பயணிகள், 19 ஊழியா்களுடன் புறப்பட்ட ‘போயிங் 777-300 இஆா்’ விமானத்தின் கழிவறையில் வெடிகுண்டு மிரட்டல் குறிப்பு இருந்ததை பயணி ஒருவா் பாா்த்துள்ளாா். விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்த அந்த மிரட்டல் குறித்து விமான ஊழியா்களிடம் அந்தப் பயணி தெரிவித்துள்ளாா்.

அதைத் தொடா்ந்து, புறப்பட்ட 9 மணி நேரத்துக்குப் பிறகு விமானம் மீண்டும் மும்பை விமான நிலையத்தில் திங்கள்கிழமை காலை 10.25 மணிக்கு தரையிறக்கப்பட்டு, தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது.

‘விமானத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் வெடிகுண்டுகள் எதுவும் கண்டறியப்படவில்லை. இந்த மிரட்டல் தொடா்பாக அடையாளம் தெரியாத நபா் மீது முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆா்) பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது’ என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.